அர்ஜெண்டினா: தாயின் கள்ளக்காதலனால் கர்ப்பமான சிறுமி- கருக்கலைப்புக்கு கோர்ட் தடை
பியூனோஸ்: தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அர்ஜெண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாக ரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தர்.
முதல் கணவர் மூலம் பிறந்த தனது 14 வயது மகளையும் தன்னுடன் வைத்து அவர் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வெளியே சென்றிருந்தபோது குடிபோதையில் இருந்த அவரது கள்ளக்காதலன் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டார்.
தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அந்த பெண் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை நாடினார்.
சால்டோ நகரின் சட்டதிட்டங்களின்படி, இங்கு கருக்கலைப்பு என்பது கொடிய குற்றமாக கருதப்படுகிறது. எனவே, அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்து விட்ட டாக்டர், 'நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வந்தால் கருக்கலைப்பு செய்ய தயார்' என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, சால்டோ நகரின் குடும்ப கோர்ட்டில் தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அந்த பெண் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டர் சோரியா, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார். கருவை கலைத்துக் கொள்வதற்கான மனுதாரரின் உரிமையை விட, இன்னும் இந்த பூமியை பார்த்திராத அந்த கருவின் வாழ்வுரிமை தனக்கு பெரிதாக தெரிவதாக தெரிவித்த நீதிபதி, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார்.
குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்து, யாருக்காவது தத்து கொடுத்துவிடும் படியும் அந்த சிறுமிக்கு நீதிபதி அறிவுரை கூறினார்.
இந்த தீர்ப்பை கேட்டு கொதித்துப் போன சிறுமியின் தாயார் ‘எனது மகள் தேவை இல்லை என்று கருதும் ஒரு கருவை இன்னும் 8 மாதம் அவள் வயிற்றில் சுமந்திருந்து, பிள்ளையாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி கூறுவது கொடுமையான தீர்ப்பாக உள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications