For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீட்டை மாத்திக்குவோமா ..அதிபர் ட்ரம்புக்கு அர்னால்ட் ஸ்வார்ட்ஸ்நேகர் சவால்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்). உலகத்தையே புரட்டிப் போடும் அளவுக்கு 7 நாடுகளுக்கு விசா தடை, ஆஸ்திரேலியா பிரதமரின் போன் கால் துண்டிப்பு, மெக்சிகோ பார்டருக்காக அக்கப்போர் என்று சுழன்றி அடித்துக் கொண்டிருக்கும் அதிபர் ட்ரம்ப், அர்னால்ட் ஸ்வார்ட்ஸ்நேகரையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

ஒரு காலத்தில் டொனால்ட் ட்ரம்ப், 'celebrity apprentice' என்ற தொலைக்காட்சித் தொடரின் தொகுப்பாளாராக இருந்தார். தற்போது அர்னால்ட் அந்த ப்ரோக்ராமை தொகுத்து வழங்குகிறார்.

Arnold's challenge to Trump

டி.ஆர்.பி காணாமல் போச்சே!

2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ட்ரம்ப் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடப் போவதாக
அறிவித்ததும், இந்த டிவி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

அவருடைய மாற்றாக அர்னால்ட் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அர்னால்டை பாராட்டி ட்ரம்ப் ட்வீட் போட்டிருந்தார். 'எனது நண்பர் அர்னால்ட்க்கு வாழ்த்துக்கள். அவர் நிச்சயம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த்துவார். அதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிறைய நன்கொடை கிடைக்கும்' என்றும் கூறியிருந்தார்.

நேற்று காலைச் சிற்றுண்டி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், அர்னால்ட் வருகையினால் டிவி ரேட்டிங் தலைகீழாக குறைந்து விட்டது. அர்னால்ட்டின் நல்ல ரேட்டிங்குக்காக நான் பிரார்த்திக்கிறேன். என்று கூறியிருந்தார்.

Arnold's challenge to Trump

சீட்டை மாத்திக்குவோமா?

ஏதோ கேலியாகத்தான் ட்ரம்ப் கூறியிருக்கிறார் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இது முதல் முறை அல்லவே. அர்னால்ட் பொறுப்பேற்ற பிறகு, கொஞ்சம் கடுப்பாகவே ட்ரம்ப் கமெண்ட் செய்து வந்திருந்தார்.

நேற்றைய ட்ரம்பின் பேச்சைக் கேட்ட அர்னால்ட் பொங்கி எழுந்து விட்டார். வீடியோ மூலம் ட்ரம்புக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ரெண்டு பேரும் வேலையை மாற்றிக்கொள்ளலாம். டிவி நிகழ்ச்சியில் ரேட்டிங் அதிகமாக வாங்கும் திறமையுடைய நீங்கள் Celeberity Apprentice நிகழ்சியை தொகுத்து வழங்குங்கள். நான் உங்கள் பொறுப்பை (அமெரிக்க அதிபர்) பார்த்துக் கொள்கிறேன், அமெரிக்க மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என்று அர்னால்ட் கூறியிருக்கிறார்.

மேலும் அவருடைய மேனஜர் மூலம் அறிக்கையாகவும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ட்ரம்பின் குடியரசுக் கட்சியின் சார்பில் கலிஃபோர்னியாவில் இரண்டு தடவை கவர்னராக இருந்துள்ளார் அர்னால்ட். அவர் பிறந்தது ஆஸ்திரியா நாடு என்பதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடையாது.

இல்லையென்றால், ஜனநாயகக் கட்சி கோட்டையான கலிஃபோர்னியாவில் வெற்றி பெற்ற அர்னால்ட், இன்னொரு ரொனால்ட் ரீகனாக வந்திருக்கக்கூடும்.

சும்மாங்காட்டியும் அர்னால்ட் கேட்கவில்லை போலும், கவர்னராக இருந்த அனுபவத்தை சுட்டிக்காட்டித்தான் டொனால்ட் ட்ரம்பை மடக்கியிருக்கிறார் எனத் தெரிகிறது.

English summary
President Donald Trump and California Ex Governor Arnold Schwarzenegger exchanged words, hallenging to swap each other’s current role respectively US President and Celebrity Apprentice TV host. It is to be noted thatTrump was the host of the TV program prior to Arnold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X