$17 டிரில்லியன்! 10 ஆண்டுகளில் சீனா புது உச்சம்! இந்தியாவுடன் ஒப்பிட்டால் எவ்வளவு வளர்ச்சி தெரியுமா
பெய்ஜிங்: சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜங்பிங் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவின் கடந்த 10 ஆண்டுக்கால வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
இது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை கிளப்பி வருகிறது. இந்தியாவும்-சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டங்களில் விடுதலையடைந்த நிலையில் தற்போது சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளது என்பதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜிடிபி
சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜங்பிங் தொடர்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் வளர்ச்சி குறித்து பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது சீனாவின் கடந்த 10 ஆண்டுக்கால வளர்ச்சி அடிக்கோடிடப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $17.7 டிரில்லியனாக பதிவாகியுள்ளது. இது 2010ல் $5.9 டிரில்லியனாக இருந்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவின் GDP $3.18தான்.

பொருளாதாரம்
இந்தியாவுக்கு 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே பெரும் சவாலாக இருக்கிறது. ஆனால் சீனா அசால்டாக $17 டிரில்லியனை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது உலக பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு 18.5 சதவிகிதம். இது மிகப்பெரும் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவின் பங்கு 6.99 சதவிகிதமாக இருக்கிறது. அதேபோல சீனாவின் வேலையின்மை விகிதம் என்பது சராசரியாக 4% ஆக இருக்கிறது. அதே இந்தியாவில் 6.5% ஆக இருக்கிறது.

விண்வெளி
இது வெறும் டீசர்தான் என்பதை போல சீன கம்யூனிஸ்ட் கட்சி பட்டியலிட்டுள்ள சாதனைகள் மலையளவுக்கு அதிகரித்திருக்கிறது. விண்வெளித்துறையில் இந்தியா பல சாதனைகளை செய்திருந்தாலும் சொந்தமாக எந்த மனிதனையும் இன்று வரை அனுப்பியதில்லை. ஆனால் சீனாவானது அமெரிக்காவுக்கு மாற்றாக ஒரு சர்வதேச விண்வெளி மையத்தையே கட்டமைத்திருக்கிறது. அதே போல சாலை வசதிகள், விமான நிலையங்கள், அதிவேக ரயில்கள், சூப்பர் கம்யூடர்கள் என சீனா தனது வளர்ச்சியை ஆக்டபஸ் போல அனைத்து பக்கங்களிலும் விரிவாக்கியுள்ளது.

பொதுத்துறை
ஆனால் இந்தியாவை பொறுத்த அளவில் இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு இன்றும் பல பத்தாண்டுகள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இந்தியா தயாராக வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை சாத்தியப்படுத்துவதற்கு பொதுத்துறையை பலப்படுத்துவது இன்றியமையாதது என்றும் ஏனெனில் நாட்டில் மக்கள் கைகளில் பணம் புழங்க தொடங்கினால்தான் அந்நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications