பாகிஸ்தான் அதிபராகும் அசீம் முனீர்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் முக்கிய சந்திப்பு.. பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய அதிபராக ராணுவ தளபதி அசீம் முனீர் பதவியேற்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் திடீரென்று அசீம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அதன்பிறகு அதிபர் மாளிகைக்கு சென்ற ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து பேசி உள்ள நிலையில் அதிபர் மாற்றம் நிகழ உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக அசீம் முனீர் உள்ளார். சமீபத்தில் நம் நாட்டுடன் பாகிஸ்தான் மோதியது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு நம் நாடு பலத்த அடி கொடுத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் மொத்தமாக நம்மிடம் சரணடைந்தது. பாகிஸ்தான் ராணுவத்தால் நமக்கு பதிலடி கொடுக்க முடியவில்லை. அந்த நாடு நம்மை தாக்க எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.
இதன்மூலம் நம் நாட்டை எதிர்கொள்வதில் முற்றிலுமாக பாகிஸ்தான் ராணுவம் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட பாகிஸ்தான் அரசு அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தை வழங்கியது. இந்தியாவுடன் போரை சிறந்த முறையில் கையாண்டு பதிலடி கொடுத்ததாக கூறி அந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் ஃபீல்ட் மார்ஷல் பதவியை பெறுவது இது 2வது முறையாகும்.
இந்த நடவடிக்கை என்பது பாகிஸ்தானில் அசீம் முனீருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த மாதம் முதலில் இருந்த ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அது என்னவென்றால் பாகிஸ்தான் அதிபராக அசீம் முனீர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தற்போது பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி அதிபராக உள்ளார். இவருக்கு மாற்றாக அசீம் முனீர் அதிபராக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பின் பேரில் அசீம் முனீர் பிரதமர் மாளிகை சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் விவாதித்தனர். அதுபற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் அதிபர் மாளிகைக்கு சென்று ஆசிப் அலி ஜர்தாரியை சந்தித்தார். இதன் பின்னணியில் அதிபர் மாற்ற நடவடிக்கை தான் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அரசியல் விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தற்போது பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருக்கும் அசீம் முனீரின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அவர் தனது அதிகாரத்தை தக்க வைக்க நினைக்கிறார். இதனால் அதிபர் பதவியை எட்டிப்பிடிக்க திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். மேலும் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருப்பவர்கள் அதிபர் பதவியை எட்டிப்பிடிப்பது ஒன்றும் புதிது இல்லை. இதற்கு முன்பு சிலர் ஆட்சியை கவிழ்த்து அதிபராகி நாட்டை வழிநடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications