சீனாவை சுத்துப்போட்ட கனமழை! வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி.. 19 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்
பெய்ஜிங்: வடக்கு சீனாவில் பெய்த கனமழை காரணமாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மட்டுமல்லாது கோடிக்கணக்கான அளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
டோக்சுரி சூறாவளி காரணமாக வட சீனம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெய்ஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை மதியம் 1 மணி வரை இந்த பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி இப்பகுதிகளில் சுமார் 580.9 மி.மீ வரை மழை பொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது பெய்த மழையின் அளவு வெறும் 25 மி.மீதான். ஆனால் சீனாவின் தலைநகரில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 196.9 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இரண்டு பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 31,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
பெய்ஜிங்கின் ஃபெங்டாய் மாவட்டத்தை ஹெபேயில் உள்ள ஷாசெங்குடன் இணைக்கும் 105 கி.மீ ரயில் பாதை முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளதால் ரயில் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4,000 கட்டுமான பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. உணவு பொருட்களை பொறுத்த அளவில் சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் காரணமாக சுமார் ரூ.550 அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல இந்த வெள்ளத்தால் சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "நாங்கள் இதுபோன்ற பேய் மழையை இதற்கு முன்னர் பார்த்ததில்லை. தொடர்ந்து 40 மணி நேரம் வரை மழை பெய்திருக்கிறது. இந்த விடாத மழை எங்களை பெரிதும் பாதித்துவிட்டது. எங்களுடைய கார்கள், வீட்டிலிருந்த பொருட்கள் என அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. எங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பேய் மழையை நாங்கள் பார்த்ததில்லை" என்று 20 வயது இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
மீட்பு பணிகள் குறித்து அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகளுக்காக ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளும் ரயில் நிலையங்களும் மழை நீரில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சீனா பார்த்த இரண்டாவது வெள்ளம் இது. கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த கனமழை இதேபோல பெரும் வெள்ளத்தை உருவாக்கியது. இதனால் சுமார் 79 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications