Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மகளுடன் ‛டேட்’ செய்யுங்க! ‛டிக்டாக்’ அம்மாவின் 5 கண்டிஷனை பாருங்க! கடைசி ரூல்ஸால் மிரளும் பாய்ஸ்

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: என் மகளுடன் ‛டேட்' செய்யுங்க என 19 வயது இளம்பெண்ணின் அம்மா வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் மகளுடன் ‛டேட்' செய்ய விரும்புவோருக்கு 5 நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில் இதில் கடைசி ரூல்ஸை பார்த்து ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இணையதளத்தில் அறிவார்ந்தது முதல் வேடிக்கையான செயல்கள் என அனைத்து வகையிலான வீடியோக்கள் நிரம்பி உள்ளன. மேலும் பலர் தங்களின் திறமையை வெளிக்காட்டும் வகையில் பாடலுக்கு நடனமாடியும், சிலர் வசனங்களுக்கு நடித்தும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக டிக்டாக் என்ற செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

ஆஸ்திரேலியா அம்மா

ஆஸ்திரேலியா அம்மா

இதனால் இந்தியாவை போன்று ஏராளமானவர்கள் தங்களின் சொந்த விஷயங்களை வீடியோவாக டிக்டாக்கில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேட் கிளார்க் என்ற பெண், டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது 19 வயது மகள் டேட்டிங் செய்ய விரும்புகிறார் என கூறியுள்ள அவர், அவருடன் டேட் செய்ய விரும்பும் நபர்கள் 5 முக்கிய கண்டிஷன்களை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

5வது நிபந்தனைக்கு எதிர்ப்பு

5வது நிபந்தனைக்கு எதிர்ப்பு

தற்போது இந்த நிபந்தனைகள் தான் பேசும் பொருளாக மாறியுள்ளது. கேட் கிளார்க் கூறிய 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை சிலர் ஏற்றுக்கொண்ட நிலையில் பெரும்பாலானவர்கள் 5வது நிபந்தனையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் 5வது நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்து அதனை எதிர்த்தனர். அப்படி என்ன ஐந்து நிபந்தனைகள் என நினைக்கிறீர்களா?.. இதோ கேட் கிளார்க் தனது மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் நபர் தொடர்பாக விதித்த 5 நிபந்தனைகள் வருமாறு:

முதல் 2 நிபந்தனைகள் என்ன?

முதல் 2 நிபந்தனைகள் என்ன?

முதல் நிபந்தனையை அவர் வாழ்த்துடன் மகள் டேட் செய்ய விரும்புவதை தான் கூறியுள்ளார். அதன்படி ‛‛அனைவருக்கும் குட்லக். நான் கூறப்பபோகும் நல்ல விஷயம் என்னவென்றால் எனது மகள் டேட் செய்ய தயாராக இருக்கிறார்'' என கூறியுள்ளார். 2வது நிபந்தனையாக ‛‛எனக்கும், எனது மகளின் பிறந்தநாளும் ஒரே தேதியாகும். மகளின் முந்தைய காதலர் இருவருக்கும் பரிசுகளை வழங்கினார். அதேபோன்று வரும் நாட்களிலும் என் மகளுடன் டேட் செய்யும் நபர் அவளுக்கும், எனக்கும் பரிசுகள் வழங்க வேண்டும். இதில் எதிர்ப்பார்ப்புகள் அதிகம் உள்ளன'' என கூறியுள்ளார்.

3, 4வது நிபந்தனைகள் என்ன?

3, 4வது நிபந்தனைகள் என்ன?

மேலும் 3வது நிபந்தனையாக ‛‛6 மாத டேட்டிங்கிற்கு பிறகு தான் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார். 4வது நிபந்தனையாக, ‛‛டேட்டிங் வாழ்க்கை எப்படி இருந்தாலும் கூட கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் முக்கியமானது. இதனால் எக்காரணம் கொண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டத்தை தவிர்த்து விடக்கூடாது'' என கூறியுள்ளார்.

கடைசி நிபந்தனை என்ன?

கடைசி நிபந்தனை என்ன?

மேலும் கடைசி மற்றும் 5வது நிபந்தனையாக, ‛‛எனது மகளை டின்னர் பார்ட்டிக்கு அழைத்து செல்லக்கூடாது. ஒருவேளை அழைத்து சென்றால் அதற்கான பில்லை டேட் செய்யும் நபர் தான் கொடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார். இதில் முதல் 4 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் 5வது நிபந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை.

நெட்டிசன்கள் கூறுவது என்ன?

நெட்டிசன்கள் கூறுவது என்ன?

இதுதொடர்பாக பலர், ‛‛தற்போதைய காலத்தில் ஆண்-பெண் என இருவரும் வேலை செய்து வருகின்றனர். இதனால் டேட் செய்யும்போது இருவரும் செலவை பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை'' என கூறியுள்ளனர். மேலும் ஒருவர் வீடியோவின் கமெண்ட் பிரிவில், ‛‛நான் ஒரு பையனுக்கு அம்மாவாக இருக்கிறேன். தற்போது காலம் என்பது மாறிவிட்டது. ஆண்களும், பெண்களும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். எனவே யார் வேண்டுமானாலும் பில் செலுத்தலாம். இதில் ஆண் தான் செலுத்த வேண்டும் என்பது இல்லை'' என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+