விடைபெற்றார் ஷேன் வார்னே.. மாரடைப்பால் காலமானதாக தகவல்.. கண்ணீர் விடும் கிரிக்கெட் ரசிகர்கள்
மெர்ல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது மாயாஜால பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்த ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவானான வீரர் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக காலமானார்.
Recommended Video
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே.
தனது ரிஸ்ட்ஸ்பின்னர் மூலம் பல எதிரணி வீரர்களையும் பல ஜாம்பவான்களையும் களத்தில் தெரிக்கவிட்டவர். சச்சின் , லாரா, சேவாக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையே தனது அபார சுழற்பந்து வீச்சால் தடுமாற வைத்தவர்.

கிரிக்கெட் ஜாம்பவான்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன்வார்ன். டெஸ்ட் போட்டியில் மட்டும் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போதுவரை பல பேட்ஸ்மேன்களின் கனவில் சிம்ம சொப்பனமாக திகழ்பவர். 1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினார்

சுழல் ஜாலம்
வார்ன், தனது சூழல் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். ஸ்பின்னர்கள் என்றாலே ஆல் டைம் பெஸ்ட் வரிசையில் ஷேன்வார்னேவுக்கு தனி இடம் உண்டு. இவ்வளவு புகழ் இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வார்னேவுக்கு புதிதல்ல. மைதானத்தில் சிகரெட் பிடித்தது , போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வாகனம் ஓட்ட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது என அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியவர் வார்ன்.

திடீர் விபத்து
தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை செய்துவந்த வார்னே, ஆஷஸ் தொடரில் கலந்து கொண்டு பல சுவராசியமான ஆட்ட நுணுக்கங்களை விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். ஷேன் வார்னேவும் அவரது மகன் விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து தனது மன உறுதியை வெளிக்காட்டினர்.

திடீர் மரணம்
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்டைம் பேவரிட் வீரரான ஷேன் வார்னே திடீரென மரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications