காஷ்மீரை கொடுத்துடுங்க.. அடிச்சா தாங்கமாட்டீங்க.. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் மக்கள்.. யாரு?
பலுசிஸ்தான்: ‛‛ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டுவிட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இதற்கு சர்வதேச சமூகங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது'' என்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7 ம் தேதி நம் நாட்டின் முப்படைகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின. இதில் விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தன. ஏவுகணை மற்றும் ஹம்மர் குண்டுகளை பயன்படுத்தி விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.

நம் நாட்டின் அதிரடி தாக்குதலுக்கு அஞ்சிய பாகிஸ்தான் உடனடியாக போரை நிறுத்த கெஞ்சியது. அதனை நம் நாடு ஏற்ற நிலையில் தற்போது போர் நிறுத்தம் என்பது அமலில் உள்ளது. அதோடு எல்லையில் அமைதி திரும்பி உள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் பலூச் மக்கள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இதுபற்றி பலூச் போராட்ட குழுவின் முக்கிய தலைவராகவும், எழுத்தாளராகவும் இருக்கும் மிர் யார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
14 மே 2025 பலுசிஸ்தான் முழுவதுமாக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் முடிவை வரவேற்கிறது. டாக்காவில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க சர்வதேச சமூகங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானை வெளியேற வலியுறுத்த வேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது.
பாகிஸ்தான் கவனமாக செயல்படவில்லை என்றால் அந்த நாட்டின் ராணுவ ஜெனரல்கள் தான் ரத்தகளரிக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறது'' என்று கூறியுள்ளார். மேலும் இந்த பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை நேரடியாக டேக் செய்துள்ளார். இது பாகிஸ்தானுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது பாகிஸ்தானில் ஒரு மாகாணமாக இருக்கும் பலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கை பலூச் மக்களிடம் உள்ளது. பலுசிஸ்தான் விடுதலையை சில நாட்களுக்கு முன்பு அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்களை இனி பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டாம். பலுசிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டும் என்று சுதந்திரம் அறிவித்துள்ள நிலையில் முறையான நாடாக அங்கீகரிக்க இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications