பற்றி எரியும் வன்முறை! இந்திய ரேடாரில் வங்கதேச விமானம்.. உள்ளே ஷேக் ஹசீனா உடன் மற்றொரு முக்கிய நபர்?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டமாகத் தொடங்கிய இது வன்முறையாக மாறியது. போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே அவர் விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் ஏறி இந்தியா வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Bangladesh Sheikh Hasina

இதற்கிடையே வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான லாக்ஹீட் C-130J ஹெர்குலஸ் ரக விமானமான AJAX1431 விமானத்தை இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த விமானத்தில் தான் இந்தியா வருவதாகக் கூறப்படுகிறது. தனது இல்லத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேறிய அவர், இப்போது இந்த விமானத்தில் ஏறி இந்தியா வருகிறார்.

வங்கதேச பிரதமருடன் மற்றொரு நபர்: இந்திய எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வங்கதேசத்தில் இருக்கும் போதில் இருந்தே அதிகாரிகள் அவரை கண்காணித்து வருகிறார்கள். அவரது இந்த விமானம் டெல்லி நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த விமானத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடன் சில உயர் அதிகாரிகளும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அவரது சகோதரியும் அந்த விமானத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Bangladesh Sheikh Hasina

வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் இராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் இப்போது அரசை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

டெல்லி செல்கிறார்: இந்த வங்கதேச விமானப்படை விமானம் பாட்னாவை கடந்து உத்தரப் பிரதேசம்-பீகார் எல்லை அருகே கண்காணிக்கப்பட்டது. உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அங்கே நிலவும் சூழலையும் ஷேக் ஹசினாவின் விமானத்தையும் துல்லியமாகக் கண்காணித்து வருகிறார்கள். அவர் டெல்லி செல்வதாக என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+