வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்.. நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்! ராணுவம் வார்னிங்
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவ தடையை மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததால் வங்கதேச நாடாளுமன்றம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகினார். இந்தபோராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12 ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் வங்கதேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் வன்முறை வெடித்தது.
பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் முன்னாள் பிரதமர் முஜிபுர் ரகுமான், ஷேக் ஹசீனா வீடுகள், அவாமி லீக் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த இங்குலாப் மாஞ்சா அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார்.
இதனால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இந்து வாலிபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். போராட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், தொடர்ந்து போராட்டம் நீடித்து வந்த நிலையில், இன்று அவரது இறுதிச்சடங்கு ஏற்பட்டது. இதில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
தடையை மீறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து ராணுவம் குவிக்கப்பட்டது. ராணுவம் விடுத்த எச்சரிக்கையையடுத்து, போராட்டக்காரர்கள் ஷபாக் பகுதியை நோக்கி சென்று வருகிறார்கள். வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுக்க உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications