For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

41வது அமெரிக்க அதிபரின் மனைவியும், 43வது அதிபரின் தாயுமான பார்பரா புஷ் காலமானார்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ்ஷின் மனைவி பார்பரா காலமானார்.

அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ்ஷின் மனைவி பார்பரா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் ஹூஸ்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 92.

Barbara Bush, former first lady of the USA no more

பார்பராவின் மகனான ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் 43வது அதிபராக இருந்தார். பார்பரா மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். அவரும், புஷ்ஷும் கடந்த ஜனவரி மாதம் தங்களின் 73வது திருமண நாளை கொண்டாடினார்கள்.

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டார் பார்பரா. முன்னதாக 2008ம் ஆண்டு அல்சருக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சிகிச்சை நடந்த நான்கு மாதங்களில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பார்பராவின் மற்றொரு மகனான ஜெப் 1999ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை புளோரிடாவின் ஆளுநராக இருந்தார். அவர் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளராக முயன்று தோற்றார்.

அவருக்காக பிரச்சாரம் செய்த பார்பரா தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பை விளாசிப் பேசினார். பெண்கள், ராணுவத்தை பற்றி மோசமாக பேசியவர் டிரம்ப் அப்படிப்பட்டவரை மக்கள் ஏன் நாடுகிறார்கள் என்று கேட்டார்.

English summary
Barbara Bush, wife of 41st US president and mother of 43rd president passed away at her home in Houston on tuesday evening. She was 92.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X