For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது ஹெஸ்புல்லா ஸ்டைல் அட்டாக்.. பெய்ரூட் வெடிப்பில் புதிய கோணம்.. பீதியை கிளப்பும் இஸ்ரேல்.. பின்னணி

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட மிக மோசமான கிடங்கு வெடிப்புக்கு பின் லெபனானில் இருந்து ஆயுத குழுவான ஹெஸ்புல்லா அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேல் இந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இரண்டு நாள் முன் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் பாதிப்பு இன்னும் போகவில்லை. இதுவரை 137 பேர் இந்த பயங்கர வெடிப்பில் பலியாகி உள்ளனர். இதுவரை காயம் அடைந்த 4000 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அங்கு இன்னும் மீட்பு பணிகளை செய்ய முடியாமல் அரசு திணறி வருகிறது. மொத்தமாக இதுவரை 3 ஆயிரம் பேர் வரை இந்த வெடிப்பில் காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த நகரமே மிக மோசமான அழிவை இதனால் சந்தித்து இருக்கிறது.

அதிரவைக்கும் லெபனான் வெடிவிபத்து வீடியோ.. ஒரு கட்டடம் கூட தப்பவில்லை.. உருக்குலைந்த பெய்ரூட் நகரம்!அதிரவைக்கும் லெபனான் வெடிவிபத்து வீடியோ.. ஒரு கட்டடம் கூட தப்பவில்லை.. உருக்குலைந்த பெய்ரூட் நகரம்!

இஸ்ரேல் மறுப்பு

இஸ்ரேல் மறுப்பு

இந்த நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததும் முதல் ஆளாக இஸ்ரேல் இதை மறுத்தது. அதாவது நாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று இஸ்ரேல் முதல் ஆளாக மறுத்தது. காரணம் இஸ்ரேல் கடந்த இரண்டு வாரம் முன்தான் லெபனான் எல்லையில் படைகளை குவித்தது. லெபனானில் இருக்கும் மருந்து ஆயுத குழுவான ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் லெபனான் அரசுக்கு எதிராகவும் இஸ்ரேல் படைகளை குவித்தது.

சந்தேகம்

சந்தேகம்

இதனால் தங்கள் மீது சந்தேகம் வர கூடாது என்று இஸ்ரேல் முதல் ஆளாக தனது மறுப்பை தெரிவித்தது. இந்த நிலையில் லெபனானில் நடந்த இந்த தாக்குதலுக்கு பின் லெபனானில் இருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பு இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகம் கொள்கிறது. ஹிஸ்புல்லா,ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

யார் இவர்கள்

யார் இவர்கள்

லெபனானில் ஆயுதப்படை குழுவாகவும், அரசியல் கட்சியாகவும் இந்த ஹெஸ்புல்லா இயங்கி வருகிறது. ஷியா பிரிவு இயக்கமான இது , அந்நாட்டு அரசுக்கு மிகவும் நெருக்கமானது. அதேபோல் ஈரான் போன்ற மற்ற ஷியா நாடுகளுக்கும் நெருக்கமாக இருக்கிறது. இந்த அமைப்புதான் சிரியாவில் அரசுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. அதேபோல் ஈரான் உடன் இணைந்து லெபனானில் இஸ்ரேல் ஆதிக்கத்தை தடுக்க போராடி வருகிறது.

லெபனான் போர்

லெபனான் போர்

சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில் லெபனானில் நடந்த வெடிப்பு ஹெஸ்புல்லா இயக்கம் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகம் கொள்கிறது. இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் சிலர் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர் . இது ஹெஸ்புல்லா ஸ்டைல் அட்டாக் என்று கூறியுள்ளனர் .

அம்மோனியம் நைட்ரேட்

அம்மோனியம் நைட்ரேட்

அதன்படி 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் அந்த கிடங்கில் இருந்தது கண்டிப்பாக ஹெஸ்புல்லா அமைப்பிற்கு தெரியும். அவர்கள் தெரிந்துதான் இதை அங்கே வைத்து இருந்தனர். இந்த துறைமுகத்தை ஹெஸ்புல்லா இயக்கம்தான் கட்டுப்படுத்தி வருகிறது. ஹெஸ்புல்லா இயக்கத்தின் அனுமதி இன்றி, ஒரு துரும்பு கூட இந்த துறைமுகம் உள்ளே நுழைய முடியாது. அப்படி இருக்கையில் கண்டிப்பாக 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்தது ஹெஸ்புல்லா அமைப்பிற்கு தெரிந்து இருக்கும்.

யார் ஸ்டைல்

யார் ஸ்டைல்

பொதுவாக இப்படி அதிக அளவில் அம்மோனியம் நைட்ரேட்டை சேர்த்து வைப்பதில் ஹெஸ்புல்லா அமைப்பு கை தேர்ந்தது. குண்டுகளை உருவாக்க வசதியாக இவர்கள் இப்படி மூட்டை மூட்டையாக அம்மோனியம் நைட்ரேட்டை சேர்த்து வைப்பார்கள். லண்டனில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஹெஸ்புல்லா இதேபோல் 2015ல் ஒரே இடத்தில் மூன்று மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை வைத்து இருந்தது .

வரலாறு

வரலாறு

ஜெர்மனியிலும் இதேபோல் அம்மோனியம் நைட்ரேட்டை ஹெஸ்புல்லா வைத்து இருந்தது இந்த வருடம்தான் கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் இந்த லெபனான் வெடிப்பிற்கு பின் கண்டிப்பாக ஹெஸ்புல்லா இருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது. வேண்டுமென்றே ஏதாவது திட்டத்தை மனதில் வைத்து இதை ஹெஸ்புல்லா வெடிக்க செய்து இருக்கலாம், அல்லது குண்டுகள் தயாரிக்க வைத்து இருந்த அம்மோனியம் நைட்ரேட் தவறுதலாக வெடித்து இருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது

Recommended Video

    Beirut விபத்துக்கு பின் இருக்கும் முக்கியமான காரணங்கள்
    முன்பே இப்படி

    முன்பே இப்படி

    2016 பிப்ரவரியில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த போவதாக ஹெஸ்புல்லா கூறியுள்ளது. இஸ்ரேலின் ஹைபா பகுதியில் இருக்கும் அம்மோனியம் கிடங்கில் தாக்குதல் நடத்த போவதாக ஹெஸ்புல்லா எச்சரிக்கை விடுத்தது. தற்போது ஹெஸ்புல்லா கட்டுப்பாட்டில் இருக்கும் லெபனானில் இந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது. இதுதான் சந்தேகத்தை அதிகமாக்கி உள்ளது.

    English summary
    Beirut Blast: Israel connects Hezbollah with ammonium nitrate for Lebonan disaster two days back .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X