For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்!!

Google Oneindia Tamil News

பெய்ரூட்: பெய்ரூட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரமாக வெடித்து சிதறியது அம்மோனியம் நைட்ரேட்டுடன் கலந்த வெடிகுண்டாகவும் இருக்கலாம் என்று வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நகருக்கு நடுவில் இருந்த கிடங்கில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் 160 பேர் உயிரிழந்தனர். 6,000 பேர் காயம் அடைந்தனர். 3,00,000 பேர் லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இங்கு கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த மொத்தம் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது.

Beirut explosion may be caused by burning military missiles not ammonium nitrate says experts

இதையடுத்து அந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இதுகுறித்து நிபுணர்கள் தெரிவித்து இருக்கும் தகவலில், ''வெடிவிபத்து நடந்தபோது, மஞ்சள் நிறத்தில் புகை பரவி இருந்தது. முதலில் கரும்புகையுடன், பின்னர் சிவப்பு நிறத்தில், இறுதியாக சிவப்பு கலந்த ஆரஞ்ச் நிறத்தில் புகை வெளியாகி இருக்கிறது. இதற்குக் காரணம், கண்டிப்பாக வெடியில் லித்தியம் கலந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்தக் கலரில் புகை வெளியேறும். அம்மோனியம் நைட்ரேட்டுடன் போர் தளவாடங்களும் இருந்து இருக்க வேண்டும்.

போதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்!!போதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்!!

ஹிரோஷிமாவில் அமெரிக்கா வெடிகுண்டு வீசியபோது, பயங்கரமான சத்தத்துடன் புகை ஏற்பட்டது. அதைவிட ஐந்து மடங்கு இந்த வெடிவிபத்து காணப்பட்டது. முதலில் அம்மோனியம் நைட்ரேட்டில் தீப்பிடித்து பின்னர் அந்த தீ, அருகில் வைக்கப்பட்டு இருந்த ஏவுகணைகள், ராக்கெட்டுகளுக்கு பிடித்து இருக்கலாம். பெய்ரூட்டில் மட்டுமில்லை, மத்தியதரைக் கடல் பகுதி முழுவதும் இந்த தீப்பிழம்பு தெரிந்தது'' என்று தெரிவித்து இருக்கின்றனர்.

English summary
Beirut explosion may be caused by burning military missiles not ammonium nitrate says experts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X