பழைய காரை ஏமாற்றி தலையில் கட்டிய டீலர் வீட்டு முன்பு, பெண் நிர்வாண போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா: பழைய காரை ஏமாற்றி விற்ற டீலரைக் கண்டித்து அவரது வீட்டின் முன்பு பாதிக்கப்பட்ட பெண் அதிரடியாக நிர்வாணப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் டீலர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார். அந்த கார் வாங்கிய 2 நாட்களிலேயே வாகனம் பழுதாகியுள்ளது.

இதனையடுத்து அந்தப் பெண் மெக்கானிக்கிடம் காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த மெக்கானிக், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

மெக்கானிக் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், கார் டீலரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். தான் கஷ்டப்பட்டு வாங்கிய காரை ஏன் இப்படி ஏமாற்றி விற்றார் என்றும் நியாயம் கேட்டுள்ளார்.

 தட்டிக்கழித்த டீலர்

தட்டிக்கழித்த டீலர்

அதற்கு அவர், காரை விற்பனை செய்தவுடன் தங்கள் பணி முடிவடைந்துவிட்டதாகவும், இனிமேல் வரும் பிரச்னைகளுக்கு தாம் பொறுப்பில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், அதிரடியாக செய்த காரியத்தால் மீடியாக்களின் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

 அதிரடி

அதிரடி

வாகனங்கள் வரிந்து கட்டி செல்லும் சாலையில் உள்ள கார் டீலரின் வீட்டின் முன் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரின் வீட்டின் கேட்டு மற்றும் தடுப்பு வேலிகள் கீழே இழுத்துத் தள்ளி சேதப்படுத்தியுள்ளார்.இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இளம்பெண்ணின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதசாரிகள், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

 விசாரணை

விசாரணை

இதனையடுத்து அந்தப் பெண் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மனநிலை குறித்தும் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bizarre footage has emerged of a furious woman staging a naked protest outside a car dealer's home.
Please Wait while comments are loading...