96 மணிநேரம்.. சிறுநீர் குடித்தே உயிரை கையில் பிடித்த சிறுவன்.. துருக்கி இடிபாட்டில் மீட்பு-கண்ணீர்

எந்த வெளிச்சமும் இல்லாமல் உணவும், தண்ணீரும் இல்லாமல் இருந்தேன். எனது தந்தை, தாய், சகோதரியின் பெயரை கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர்களின் குரல் கேட்கவில்லை.

Subscribe to Oneindia Tamil

இஸ்தான்புல்: துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் 94 மணிநேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனான்.

சுமார் 4 நாட்களாக எந்த உணவும், தண்ணீரும் இல்லாத அந்த சிறுவன் தனது சிறுநீரை குடித்தே உயிரை காப்பாற்றி வந்ததாக கண்ணீர் மல்க கூறியது அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் நடைபெறும் மீட்புப்பணிகளின் போது, நாள்தோறும் மனதை உலுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

கொத்து கொத்தாக சடலங்கள்

கொத்து கொத்தாக சடலங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாடுகளை உருக்குலைய செய்துவிட்டது. இரண்டு நாடுகளிலும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துவிட்டனர். தினம் தினம் கொத்து கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை லட்சத்தை தொடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்துக்கு பிறகு அந்த இரு நாடுகளும் மீண்டு வர முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள்

நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள்

இது ஒருபுறம் இருக்க, அந்நாடுகளில் நாள்தோறும் நடைபெறும் மீட்புப் பணிகளின் போது நெஞ்சை பிசையும் சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நிலநடுக்கத்தில் மரணம் அடைந்த தனது 15 வயது மகளின் கையை மூன்று நாட்களாக விடாமல் பிடித்தபடி இருக்கும் ஒரு தந்தையின் புகைப்படம் உலகையே அழற்றி போட்டது. அதேபோல், தந்தை - தாயை இழந்த குழந்தைகள் மீட்கப்படுவதும், அவை தங்களுக்கு நேர்ந்த துயரத்தை அறியாமல் சிரித்து விளையாடுவதும் கல் மனதையும் கரைப்பதாக உள்ளது.

17 வயது சிறுவன்

17 வயது சிறுவன்

இந்நிலையில், இன்றும் அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. காசியென்ட் பகுதியி்ல இன்று காலை நடைபெற்ற மீட்புப் பணியில் 17 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான். கட்டிட இடிபாடுகளில் சிக்கி கால் எலும்புகள் உடைந்த நிலையில் 94 மணிநேரம், அதாவது 4 நாட்களாக அவர் அங்கு இருந்துள்ளான். அவனை ராணுவத்தினர் மீட்ட போது, அவர்களிடம் அந்த சிறுவன் கூறியதுதான் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. "எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் எத்தனை நாட்களாக இருந்தேன் எனத் தெரியவில்லை. எந்த வெளிச்சமும் இல்லாமல் உணவும், தண்ணீரும் இல்லாமல் இருந்தேன். எனது தந்தை, தாய், சகோதரியின் பெயரை கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர்களின் குரல் கேட்கவில்லை.

சிறுநீரை குடித்தேன்

சிறுநீரை குடித்தேன்

கால் எலும்புகள் உடைந்ததால் என்னால் நகர முடியவில்லை. யாராவது காப்பாற்ற வர மாட்டார்களா என நினைத்து தினமும் அழுவேன். ஒருகட்டத்தில், பசியால் உயிரிழந்து விடுவேன் என பயம் வந்துவிட்டது. இதுநாள் வரை எனது சிறுநீரை மட்டுமே குடித்து உயிர் பிழைத்திருக்கிறேன். என் பெற்றோரும், சகோதரியும் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. அவர்களும் இந்த இடிபாடுகளில்தான் சிக்கியிருப்பார்கள். அவர்களையும் காப்பாற்றிவிடுங்கள்" என அந்த சிறுவன் கண்ணீர்மல்க கூறினான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+