பல ஆயிரம் கோடி போச்சே! டிரம்பை துரத்தி அடிக்கும் ‛பிரிக்ஸ்’ நாடுகள்.. சீனா - பிரேசில் அதிரடி
பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வருகிறது. டிரம்ப் அதிபரான பிறகு இந்த பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான உறவு கொதிநிலையில் உள்ளது. இப்படியான சூழலில் தான் ‛பிரிக்ஸ்' அமைப்பில் உறுப்பினராக இருக்கும் சீனாவும், பிரேசிலும் சேர்ந்து முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு ரூ.10,545 கோடி காலியாகிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது. இந்த டீல் என்ன? அமெரிக்கா எப்படி பாதிக்கும்? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. டிரம்ப் அதிபரானதுமே சீனாவுக்கு 145 சதவீத வரிகளை விதித்தார். பதிலுக்கு சீனாவும், அமெரிக்காவுக்கு 135 சதவீத வரிகளை விதித்தது. இதையடுத்து இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்கா சார்பில் சீனாவுக்கு 30 சதவீத வரிகள் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனா கடும் சீற்றத்தில் உள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் சீனா மீது கூடுதல் வரிகளை டொனால்ட் டிரம்ப் கொண்டு வரலாம். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு கொதிநிலையில் தான் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடிக்கலாம்.
அமெரிக்காவை விடாத சீனா
டொனால்ட் டிரம்பின் இந்த வரி விதிப்புக்கு சீனாவும் பதிலடி கொடுத்து வருகிறது. தங்களிடம் இருந்து அமெரிக்கா செல்லும் அரிய வகை கனிமங்களை குறைப்பது, அமெரிக்காவில் இருந்து வரும் இறக்குமதியை குறைப்பது உள்ளிட்ட வேலைகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இது டிரம்பின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதனால் தான் டிரம்ப், சீனாவிடம் கொஞ்சம் அடங்கி போகிறார்.
ஆனாலும் சீனா விடுவதாக இல்லை. டிரம்பை தொடர்ந்து பழிதீர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ‛பிரிக்ஸ்' கூட்டமைப்பில் உள்ள சீனாவும், பிரேசிலும் சேர்ந்து டிரம்பை கதறவிட்டு வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் சோயாபீன் ஏற்றுமதிக்கு சீனா தான் மெயின் மார்க்கெட்டாக இருந்தது. ஆனால் சீனா அமெரிக்காவுக்கு பதில் பிரேசிலிடம் இருந்து சோயாபீன் இறக்குமதி செய்து வருகிறது. இது அமெரிக்காவின் சோயாபீன் வர்த்தகத்தை பெருமளவில் பாதித்துள்ளது.
சோள வர்த்தகத்துக்கு ஆப்பு
இதற்கு அடுத்தக்கட்டமாக இப்போதும் சீனாவும், பிரேசிலும் கைகோர்த்துள்ளன. இந்த முறை அமெரிக்காவின் சோள வர்த்தகத்துக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஆண்டுதோறும் சோளம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து சீனா மொத்தம் ரூ.10,545 கோடிக்கு ( 1.26 பில்லியன் டாலர்)சோளத்தை இறக்குமதி செய்தது.
ஆனால் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சோள இறக்குமதியை சீனா குறைக்க தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரை அமெரிக்காவிடம் இருந்து சீனா வெறும் 82,323 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே சோளத்தை இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து சீன 1.4 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சோளம் இறக்குமதி செய்த நிலையில் அதனை இப்போது குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 97 சதவீதம் குறைவாகும். அமெரிக்காவுக்கு பதில் சீனா ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடாவிடம் இருந்து சோளம் வாங்கி வருகிறது.
பிரேசிலிடம் சோளம் வாங்க ஒப்புதல்
இப்போது புதிதாக பிரேசிலிடம் இருந்து சோளம் வாங்க சீனா முடிவு செய்துள்ளது. பிரேசிலை எடுத்து கொண்டு கடந்த சில ஆண்டுகளாக சோள உற்பத்தி அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டின் நிலவரப்படி பார்த்தால் உலகில் அதிகளவில் சோளம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியில் அமெரிக்கா, நைஜீரியாவுக்கு அடுத்தப்படியாக 3வது இடத்தில் பிரேசில் தான் உள்ளது. 4வது இடத்தில் இந்தியா உள்ளது.
பிரேசிலை எடுத்து கொண்டால் கடந்த 2023/24 காலக்கட்டத்தில் 4.4மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 1 சதவீதத்தை மட்டுமே பிரேசில் ஏற்றுமதி செய்தது. இப்பாது சீனாவுடனா டீலால் அதிகப்படியான சோளத்தை அங்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. இன்னும் 60 நாட்களில் பிரேசில் சோளம், சீனாவுக்கு செல்ல உள்ளது.
கதறும் அமெரிக்க விவசாயிகள்
இதனால் இனி சீனா, அமெரிக்காவிடம் இருந்து சோளம் வாங்காது என்று கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த உள்ளது. ஏனென்றால் அமெரிக்கா ஆண்டுக்கு 8.07 மெட்ரிக் டன் அளவுக்கு சோளம் உற்பத்தி செய்கிறது. இதில் 1.4 மெட்ரிக் டன் வரை சீனா வாங்கியது. இப்போது சீனா பிரேசில் உள்பட பிறநாடுகளிடம் வாங்குவதால் அமெரிக்க விவசாயிகள் மாற்று மார்க்கெட்டை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்கான கான்சாஸ் பகுதியை சேர்ந்த விளைபொருள் உற்பத்தியாளர் கிரேக் மீக்கர் கூறுகையில், ‛‛பிரேசிலிடம் இருந்து சீனா சோளம் வாங்குவது அமெரிக்க விவசாயிகளை அதிகமாக பாதிக்கும். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவின் சோள விவசாயிகள் சீனா மார்க்கெட்டை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். சீனா நம்பகமான பார்ட்னராக இருந்தது. இப்போது சீனா, பிரேசில் பக்கம் சாய்ந்தது. எங்களுக்கு நம்பமுடியாத அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை நாங்கள் எளிதாக கடந்து செல்ல முடியாது'' என்று கதறியுள்ளார்.
டிரம்புக்கு சிக்கல்
இது வருங்காலத்தில் டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அமெரிக்காவில் சோள விவசாயிகள் டிரம்புக்கு எதிராக திரும்பலாம். இதுபற்றி பிரேசில் விவசாய அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில், ‛‛பிரேசில் சோளத்துக்கு சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல் அமெரிக்காவுக்கு மாற்றாக பிரேசிலில் இருந்து சீனாவுக்கு சோளம் அனுப்பி வைக்கப்படும். '' என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications