ஐஎம்எஃப் தலைமையை மாற்ற கோரும் பிரிக்ஸ்! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் இன்று பிரிக்ஸ் (BRICS) மாநாடு தொடங்குகிறது. இதில் ஐஎம்எஃப் தலைமைக்கு மாற்று வேண்டும் என்று உறுப்பு நாடுகள் வலியுறுத்த இருக்கின்றன. இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுந்திருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகள் சமீப காலமாக பொருளாதாரத்திலும் சரி மற்ற விவகாரங்களிலும் சரி வேகமான வளர்ச்சியை எட்டி வருகின்றன. ஒரு காலத்தில் ஜி-7 நாடுகளின் மாநாடுதான் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது பிரிக்ஸ் பிடித்திருக்கிறது. உலக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகளில் பங்களிப்பு என பிரிக்ஸ் வளர்ந்து வந்தாலும் இதனை மேற்கு நாடுகள் அங்கீகரிக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் பிரிக்ஸ் கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானங்கள் போடப்பட இருக்கின்றன. அதாவது, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், குறிப்பாக, வாக்களிக்கும் உரிமைகளை மறுபகிர்வு செய்வது மற்றும் ஐரோப்பிய நிர்வாகத்தின் தலைமைப் பதவியை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை செய்யப்பட வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டு அது குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
ஐஎம்எஃப்-ஐ பொறுத்தவரை, அதன் தலைவர் பதவிக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள்தான் காலங்காலமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது எழுதப்படாத விதியாகவே தொடர்கிறது. உண்மையலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்பை விட தற்போத வலுவிழந்துள்ளன. பிரிக்ஸ் நாடுகள் பேரெழுச்சி பெற்று வருகின்றன. அப்படி இருக்கையில், ஏன் ஆசியாவிலிருந்து ஒருவரை தலைவராக நியமிக்க கூடாது என்பதுதான் தற்போதைய கேள்வி.
மட்டுமல்லாது திறமைனயின் அடிப்படையில் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் வலியுறுத்துகிறது. அதேபோல IMF இல் உறுப்பு நாடுகளின் பங்களிப்புகள் மற்றும் வாக்குரிமைகளை வரையறுக்கும் ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்த BRICS நாடுகள் விரும்புகின்றன.
இந்த பிரச்சனை குறித்த எடுக்கப்படும் முடிவுகளுக்கு இந்திய என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது? என்பது கேள்விக்குறி. ஏனெனில் இந்தியா தற்போது அமெரிக்கா சார்பாக மாறி வருகிறது. ஐஎம்எஃப் அமெரிக்காவின் கன்ட்ரோலில் இருக்கிறது. எனவேதான் இந்தியாவின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் இந்த மாநாட்டுக்கு சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள். சீனா அதிபர் சமீபத்தில்தான் பிரிக்ஸ் தலைவர்களை சந்திருந்ததாகவும், எனவே இந்த முறை, அவருக்க பதிலாக சீனாவின் பிரதமர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதின் கதை வேறு. உக்ரைன் போர் காரணமாக அவர் மீது சர்வதேச நீதிமன்றம் கைது கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
சர்வதேச நீதிமன்றங்களை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு இவர் நுழையும் பட்சத்தில் கைது செய்யப்படலாம். பிரிக்ஸ் மாநாடு நடக்கும் பிரேசில் சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவேதான் பிரேசிலுக்கு புதின் வருவதை தவிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications