ஒரு நாளைக்கு எவ்ளோ வாழைப்பழம் வேணுனாலும் சாப்பிடுங்க... நோ பிராப்ளம்- லண்டன் ஆய்வு!
லண்டன்: லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 6 வாழைப்பழங்களுக்கு மேலும் சாப்பிடலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
வாழைப்பழங்களில் உள்ள "பொட்டாசியம்" இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான். ஆனால், அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம் என்ற எண்ணத்துடனேயே வாழைப்பழத்தை பலர் உண்ணத் தயங்குகின்றனர்.
சிலர் ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே உண்ணலாம் என்றும், ஏழாவது வாழைப்பழம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் ஆணித்தனமாக நம்புகின்றனர்.

400 மிலி பொட்டாசியம்:
ஒரு நாளைக்கு நமது உடலுக்கு சுமார் 4800 மில்லி கிராம் பொட்டாசியம் தேவைப்படும். ஆனால், ஒரு வாழைப்பழத்தில் சுமார் 400 மில்லி கிராம்களே உள்ளது. அதிலும், நமது உயிரைக்குடிக்கும் அளவுக்கு வாழைப்பழம் வலுவாக இருக்க சுமார் 400 பழங்களையாவது ஒரேயடியாக உண்ண வேண்டும்.

சிறுநீரகத்தை தாக்காது:
அவற்றில் இருக்கும் பொட்டாசிய சத்து நேரடியாக சிறுநீரகத்தைத் தாக்கினால் உயிரிழக்கலாம். ஆனால், அதை அடைவதற்கு முன் போகும் வழியிலேயே குடல் பாதி பொட்டாசியத்தை உறிஞ்சிவிடும்.

உயிரிழப்பு ஏற்படாது:
அதனால் நானூறு பழங்களை ஒன்றாய் உட்கொண்டாலும் உயிரிழப்பு ஏற்படாது என லண்டனில் உள்ள கிங் நிலையத்தின் கேத்தரின் கொலின்ஸ் என்னும் டயட்டிஷன் தெரிவித்துள்ளார். சிலர் வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுவதாக கருதுகின்றனர்.

அறிகுறிகள் தெரியவரும்:
நமக்குள்ளும் கதிரியக்கம் இருக்கிறது எனக் கூறும் அவர், கதிரியக்க விஷம் பரவ ஒரு வேளைக்கு பத்து லட்சம் வாழைப்பழங்களை உண்ண வேண்டும் என்கிறார். ஒரு நாளில் 274 வாழைப்பழங்களை தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு உட்கொண்டுவந்தால், கதிரியக்கத்துக்கான அறிகுறிகள் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். அதனால் தினசரி எவ்வளவு வேண்டுமானாலும் வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications