ஜூம் மீட்டிங்கில் நிர்வாணமாக தோன்றிய கனடா எம்.பி.,யால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஒட்டோவா : உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் பல நாடுகளிலும் அரசின் ஆலோசனை கூட்டங்கள், பார்லிமென்ட் கூட்டங்கள், கருத்தரங்குகள், விழாக்கள் உள்ளிட்டவைகள் ஜூம் உள்ளிட்ட செயலிகள் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. இதே போன்று கனடா நாட்டில் பார்லிமென்ட் கூட்டம் ஜூம் செயலி வழியாக நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது க்யூபெக் எம்.பி., வில்லியம்ஸ் ஆமோஸ், கேள்வி ஏதும் கேட்கவில்லை. விவாதத்திலும் பங்கேற்கவில்லை. மற்ற உறுப்பினர்கள் ஆன்லைனில் இணைந்திருந்த சமயத்தில் கையில் மொபைல் ஃபோனுடன் கியூபெக்-கனடா தேசியக்கொடிகளுக்கு இடையில் நிர்வாண நிலையில் தோன்றினார்.

Canada MP Appears Naked On Parliament Zoom

இதனால் மற்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, துரதிஷ்டவசமான இந்த செயலுக்காக வருத்தம் தெரிவிப்பதாக வில்லியம்ஸ் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், நான் ஜாக்கிங் சென்று விட்டு உடை மாற்ற நின்ற போது தவறுதலாக கேமிரா ஆன் ஆகி விட்டது. அவையில் உள்ள அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற தவறு இனிமேல் நடக்காது என குறிப்பிட்டுள்ளார்.

வில்லியம்சின் கட்சி தலைவரும் பிரதமருமான ஜஸ்டின் ட்ருடாவோ இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. உறுப்பினர்கள் எப்போதும் ஆடையுடன் இருக்க வேண்டும் எனவும், கேமிராக்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+