பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம்.. பிரிட்டனை தொடர்ந்து, கனடாவும் அறிவிப்பு! இஸ்ரேலுக்கு நெருக்கடி
ஒட்டாவா: கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக சுமார் 60,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போரை நிறுத்த இஸ்ரேல் முன் வராத நிலையில், ஐநா கூட்டத்தில் நாங்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என கனடா கூறியிருக்கிறது.
ஐநாவில் உள்ள 193 நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் பிரிட்டன், கனடா உள்ளிட்ட 48 நாடுகள் இதை அங்கீகரிக்காமல் இருந்து வந்தன. இந்நிலையில் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம் என பிரிட்டன் கூறிய நிலையில், தற்போது கனடாவும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறுது.

கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று பாலஸ்தீனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், "பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் தீர்வு எட்டப்படும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் அந்த அணுகுமுறை இனி சாத்தியமில்லை. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில், அதாவது செப்டம்பர் 2025-ல் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.
இதேபோன்ற அறிவிப்பை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டன. இருப்பினும் கனடா சில நிபந்தனைகளுடன்தான் இந்த ஆதரவை தெரிவித்திருக்கிறது.
அதாவது பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்க கூடாது. ஹமாஸ் எதிர்காலத் தேர்தல்களில் பங்கேற்க கூடாது என்று கனடா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கனடா பிரதமர் கூறுகையில், "இது ஜனநாயக நடைமுறைக்கு களங்கம் விளைவிக்கும் என்று சிலர் வாதிடலாம். ஆனால் இரு நாடுகள் தீர்வு என்பது வன்முறை அல்லது பயங்கரவாதத்தை விட அமைதியைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து மக்களுடனும் நிற்பதாகும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
கனடாவின் முடிவை அமெரிக்கா நிராகரித்திருக்கிறது. "கனடா பிரதமர் என்ன சொன்னாலும் அது முக்கியமில்லை. அவர் சொல்லும் வார்த்தைகள் எதையும் மாற்றப் போவதில்லை" என்று கூறியுள்ளார். கனடா மட்டுமல்ல பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கும் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "நீங்கள் அவ்வாறு செய்தால், ஹமாஸுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று சொல்லலாம். அவர்கள் ஆதரவு பெறக்கூடாது என்று நான் நினைக்கிறேன். நான் அந்த அணியில் இல்லை" என்று கூறியுள்ளார்.
ஏனெனில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. மட்டுமல்லாது இஸ்ரேல் வசம் தற்போது இருக்கும் ஆயுதம் அனைத்தும் அமெரிக்கா கொடுத்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications