For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாராலும் திருட முடியாத ‘எர்க்கா’ சைக்கிள்... சிலி மாணவர்கள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சாண்டியாகோ: அதிக சைக்கிள் திருட்டு நிகழும் நாடான சிலியில் யாராலும் திருட முடியாது என்ற உத்திரவாத்துடன் புதிய சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அந்நாட்டு பொறியியல் மாணவர்கள் சிலர்.

ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சைக்கிள்கள் சிலி நாட்டில் காணாமல் போகின்றன. எனவே, இப்பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் அநாட்டு பொறியியல் மாண்அவர்கள் மூன்று பேர் இணைந்து புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இந்தப் புதிய சைக்கிளுக்கு அம்மாணவர்கள் எர்க்கா எனப் பெயரிட்டுள்ளனர். இந்த சைக்கிளின் சிறப்பம்சங்களை அவர்கள் தங்களது இணைய தளத்தில் விளக்கியுள்ளனர்.

தனி பூட்டு இல்லை...

தனி பூட்டு இல்லை...

பார்ப்பதற்கு சாதாரண சைக்கிள் போன்றே தோற்றமளிக்கும் இந்த சைக்கிளில் பூட்டுவதற்கு என தனி பகுதி எதுவும் வைக்கப்படவில்லை.

3 ஸ்டெப்களில்...

3 ஸ்டெப்களில்...

இதனை 3 எளிய நடைமுறைகள் மூலம் 20 வினாடிகளில் அதன் பிரேம்களைக் கொண்டு ஒரு கம்பத்தில் பூட்டி விட முடியும்.

பிரேம்களே பூட்டு...

பிரேம்களே பூட்டு...

மற்ற சாதாரண சைக்கிள்களில் உள்ள பூட்டை திருடர்கள் உடைத்து விடுகின்றனர். ஆனால், இந்த எரிக்கா மாடல் சைக்கிள்களில் பிரேம்களே பூட்டாக இருப்பது முக்கிய சிறப்பம்சம்.

பிரேம்கள் உடைக்கப்பட்டால்...

பிரேம்கள் உடைக்கப்பட்டால்...

இந்த சைக்கிளைத் திருட வேண்டுமென்றால் பிரேம்களை உடைத்தால் மட்டுமே திருட முடியும். ஆனால், அவ்வாறு பிரேம்கள் உடைக்கப் பட்ட சைக்கிளைத் திரும்ப பயன் படுத்த இயலாது.

2 ஆண்டுகளில்...

2 ஆண்டுகளில்...

எனவே, இந்த சைக்கிளை திருடர்கள் விரும்ப மாட்டார்கள் என உறுதி படக் கூறுகிறார்கள் இம்மாணவர்கள். மேலும், இன்னும் இரண்டாண்டுகளில் இந்த சைக்கிள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Three engineering students in Chile got sick of replacing their own stolen bikes, so they decided to do something about it. The result is the Yerka Project: A bike that the inventors say is impossible to steal. Good news for bike riders, bad news for thieves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X