அமெரிக்க தாக்குதலில் பலியான ஈரான் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு.. சீனா ரூ.1.6 கோடி நிதியுதவி
பெய்ஜிங்: அமெரிக்க சமீபத்தில் நடத்திய தாக்குதலில், ஈரானில் சுமார் 150 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.6 கோடியை நிவாரண உதவியாக சீனா வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது.
போர் காலங்களில் பள்ளி, மருத்துவமனைகள் மீது குண்டு வீசக்கூடாது என்பது சர்வதேச விதி. அதையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் அமெரிக்கா இந்த கொடுரத்தை செய்தது.

பள்ளி மீது தாக்குதல்
தெற்கு ஈரானில் மினாப், எனும் இடத்தில் சிறுமிகளுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியின் மீது அமெரிக்கா, திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில், 150 கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றன. நாங்களா? அப்படி ஒன்னும் தாக்குதலை நடத்தலியே என்று அமெரிக்கா இதனை மறுத்தது.
மட்டுமல்லாது, சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிவிட்டு.. சர்வதேச கவனத்தை திசை திருப்ப ஈரான் இப்படி செய்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் கொடூரம்
ஆனால், வெடித்து சிதறிய குண்டின் பாகங்களை ஆய்வு செய்தபோது அது அமெரிக்கா வீசிய குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுமிகளுக்கு இரங்கல் தெரிவித்த சீனா, அவர்களின் குடும்பத்திற்கு சுமார் 2 லட்சம் டாலர் நிதியுதவியை அறிவிதிருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1.6 கோடிக்கு சமமாகும். சீன செஞ்சிலுவை சங்கம் மூலம் இந்த உதவி ஈரானுக்கு வழங்கப்படும்.
சீனா கடும் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவோ ஜியாகுன் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும், ராணுவம் சாராத இடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை, சீனா கடுமையாக கண்டிக்கிறது. பள்ளிகளை குறி வைப்பதும், குழந்தைகளை காயப்படுத்துவதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இது மனிதநேயத்தின் எல்லை தாண்டி கொடூரம்" என்று சாடியுள்ளார்.
சர்வதேச வணிகம்
இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என்று ஈரான் கூறியுள்ளது. அமெரிக்கா இந்த விஷயத்தை ஆய்வு செய்து வருவதாக கூறியிருக்கிறது. ஆனால், அந்த பகுதியில் நாங்கள் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்று இஸ்ரேல் மறுத்திருக்கிறது.
ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டிருப்பதால், போரை நிறுத்தும் எண்ணத்தில் ஈரான் இல்லை. மறுபுறம் சர்வதேச வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாய்ப்பில்லை ராஜா வாய்பில்லை! ஈரானை இறங்க வைக்க முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட அதிபர்! -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
’வா சினிமாவுக்கு போலாம்’ வாட்ஸ் அப்பில் தொல்லை கொடுத்த ஆசிரியை! பள்ளி மாணவன் செய்த அல்டிமேட் சம்பவம் -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
ஈரான் சற்றும் எதிர்பார்க்காத விஷயம் நடந்திருக்கு.. இனி ஒவ்வொரு நாளும் ரொம்ப கஷ்டம் -
அமெரிக்காவை எதிர்க்க தயாராகும் ஈரான்.. முக்கியமான பிளான் ரெடி! ரஷ்யா, சீனா, மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் -
டிரம்ப் அதிரடி: ஈரான் போர் முடிவுக்கு வருகிறது.. பாகிஸ்தானில் 2வது மீட்டிங் விரைவில் -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
வெளிச்சம் தெரிகிறது.. இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை.. மீண்டும் Big Boss ஆக மாறும் பாகிஸ்தான்! -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்?












Click it and Unblock the Notifications