தைவானை சுற்றி சூழலும் சீன ராணுவ விமானங்கள்.. அமெரிக்காவுக்கு பொளேர் பதிலடி.. நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தைவான் மீது சீனா போரை ஆரம்பித்தால் தைவானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என அமெரிக்கா அறிவித்த நிலையில், இதற்குச் சீனா பதிலடி கொடுத்துள்ளது.

Recommended Video

    China VS America | Taiwan-ஐ சுற்றி Military Drills..China அடுத்த கட்டம் | #Defence

    ஜப்பான் நாட்டில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜப்பானுக்குச் சென்றனர்.

    அந்த சமயத்தில் குவாட் மாநாடு தொடங்கும் முன்பு, அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் பிரதமரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

     அதிபர் பைடன்

    அதிபர் பைடன்

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், சீனா பேராபத்திடம் விளையாடிக் கொண்டு இருக்கிறது என்று எச்சரித்துள்ளார். தைவான் மீது சீனா படையெடுத்தால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கும் என்று தெரிவித்தார், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பைடனின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது..

     சீனா -தைவான்

    சீனா -தைவான்

    சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தைவானை ஆட்சி செய்ததில்லை. ஆனால் தைவான் தீவைச் சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. தேவைப்பட்டால் ஒரு நாள் வலுக்கட்டாயமாகத் தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளவும் சீனா தயாராகவே உள்ளது. இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபரின் கருத்து சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பைடனின் இந்த கருத்துக்கு அன்றைய தினமே பதிலடி கொடுத்திருந்தது.

     ராணுவ பயிற்சி

    ராணுவ பயிற்சி

    சீனாவின் இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தைவானைச் சுற்றிலும் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "தைவான் தீவைச் சுற்றி சீன ராணுவம் மேற்கொள்ளும் ரோந்து மற்றும் பயிற்சிகள் தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டுக்குத் தேவையான பதிலடி தான்.

     பதிலடி

    பதிலடி

    சமீபத்தில் சீனா ராணுவம் தைவான் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் ஆயுதங்கள் உடன் கூடிய துருப்புக்களைத் தொண்டு ரோந்து மற்றும் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டது. தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான கூட்டுறவை இலக்காகக் கொண்டு, தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமானதாக உள்ளது.

     சுதந்திரம்

    சுதந்திரம்

    தைவானுக்குச் சுதந்திரம் கோருவது தோல்வியில் தான் முடியும். இதுபோன்ற செயல்களை ஆதரிப்பதும், தைவான் மூலம் சீனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைப்பது அமெரிக்காவுக்கு ஆபத்தையே தரும். சீன ராணுவம் மிகுந்த விழிப்புடன் உள்ளது. தைவான் சுதந்திரத்திற்கான எந்தவொரு வெளிப்புற சக்திகளின் குறுக்கீடு மற்றும் பிரிவினைவாத முயற்சிகளையும் முறியடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

     தெளிவு இல்லை

    தெளிவு இல்லை

    தைவான் விவகாரத்தைப் பொருத்தவரை பெரும்பாலான உலக நாடுகளைப் போலவே, அமெரிக்காவும் ராஜதந்திர ரீதியாகச் சீனாவை அங்கீகரிக்கிறது. ஆனால் அதேநேரம் தைவான் நாட்டுடனும் ராஜதந்திர உறவுகளையும் பராமரிக்கிறது. சீனா - தைவான் விவகாரத்தில் பல ஆண்டுகளாகத் தெளிவான கொள்கை முடிவை அமெரிக்கா எடுக்கவில்லை. மேலும், கொள்கை ரீதியாகத் தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா என்ன செய்யும் என்பதையும் அது தெளிவுபடுத்தவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+