மாபெரும் போர் பயிற்சி.. தயார் நிலையில் வீரர்கள்.. பேச்சுவார்த்தைக்கு பின்பும் வேலையை காட்டிய சீனா!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த பிஎல்ஏ ராணுவ படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையிலும் கூட சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது.

Recommended Video

    China Army Training : ரகசிய இடத்தில் படைகளைக் குவிக்கும் சீனா

    இந்தியா - சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்புதான் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இதில் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த மீட்டிங் பார்க்கப்பட்டது.

    புதிய சர்ச்சை

    புதிய சர்ச்சை

    இந்த நிலையில் புதிய திருப்பமாக சீனாவை சேர்ந்த பிஎல்ஏ ராணுவ படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. People's Liberation Army எனப்படும் பிஎல்ஏ ராணுவ படைத்தான் சீனாவின் முன்னணி ராணுவ பிரிவு ஆகும். இவர்கள் நேற்று மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டனர். பல்லாயிரம் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

    சீனாவின் வேலை

    சீனாவின் வேலை

    சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையிலும் கூட சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. மத்திய சீனாவில் இருந்து லடாக் எல்லைக்கு எவ்வளவு வேகத்தில் படைகளை அனுப்பலாம் என்பதை ஆராயவும், படைகள் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் சீனா இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

    மிகப்பெரியது

    மிகப்பெரியது

    சீனா சமீப நாட்களில் செய்த மிகப்பெரிய பயிற்சி இதுதான் என்று கூறுகிறார்கள். சீனா இந்த பயிற்சியை சரியாக எங்கே செய்தது என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக படைகளை அனுப்பி உள்ளனர். அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க இப்படி செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக மெசேஜாக பார்க்கப்படுகிறது.

    எப்படி எல்லாம் சென்றனர்

    எப்படி எல்லாம் சென்றனர்

    இந்த சீன வீரர்கள் சீனாவின் போர் விமானம், ரயில், பேருந்து என்று பல வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு, எவ்வளவு வேகமாக வீரர்களை இடமாற்றம் செய்ய முடியும் என்று சீனா ராணுவம் கண்டுபிடித்துள்ளது. லடாக்கில் பிரச்சனை வந்தால் உடனடியாக வீரர்களை எல்லைக்கு அனுப்ப வசதியாக சீனா இப்படி சோதனையா செய்துள்ளது. இதில் நவீன ஆயுதங்களையும் இப்படி கொண்டு சென்று இருக்கிறார்கள்.

    மிக மோசம்

    மிக மோசம்

    எல்லை பேச்சுவார்த்தைக்கு பின் லடாக்கில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனா தனது தயார் நிலை குறித்து சோதனை செய்து வருகிறது. அமைதியை விரும்பும் ஒரு நாடு ஏன் தயார் நிலை குறித்து சோதிக்க வேண்டும். ஏன் படைகளை வேகமாக அனுப்ப முடியுமா என்று ஆராய வேண்டும் என்று புரியவில்லை. இதற்கு இந்தியாவும் விரைவில் தக்க பதிலடியை கொடுக்கும் என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+