காண்டம் + கருத்தடை சாதனங்கள் இனி எளிதில் கிடைக்காது.. வரியை உயர்த்திய சீனா.. வினோத காரணம்
பெய்ஜிங்: அண்டை நாடான சீனாவில் இனி காண்டம், கருத்தடை மாத்திரை, மருந்துகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த முடியாதது. ஏனென்றால் அந்த பொருட்கள் இனி அவ்வளவு எளிதாக பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியாது. இதற்கு சீன அரசு போட்ட அதிரடி உத்தரவு தான் காரணம். அந்த உத்தரவு என்பது என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம் நாட்டின் அண்டை நாடாக சீனா உள்ளது. காலம் காலமாக உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா தான் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீனாவை பின்னுக்கு தள்ளி நம் நாடு டாப் 1ல் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் நிலவரப்படி நம் நாட்டின் மக்கள்தொகை சுமார் 146 கோடியை கடந்துவிட்டது. சீனாவை எடுத்து கொண்டால் அந்த நாட்டின் மக்கள்தொகை 142 கோடியாக உள்ளது.

பொதுவாக ஒரு நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பால் நன்மையும் உள்ளது. தீமையும் உள்ளது. தீமை என்று பார்த்தால் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்து கொடுப்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும். அதேபோல் கொரோனா போன்ற ஏதாவது புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதனை தடுப்பது பெரிய பிரச்சனையாக இருக்கும்.
அதேவேளையில் நன்மை என்று எடுத்து கொண்டால் நாட்டில் இளம்வயதினர் அதிகமாக இருப்பார்கள். பொருளாதாரம், சமூக கட்டமைப்புக்கு அதிக மக்கள்தொகை பெரிய அளவில் பலனளிக்கும். சீனாவுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அந்த நாட்டின் மக்கள் தொகை தான் இருந்தது. சீனா வல்லரசு நாடாக மாற அந்த நாட்டின் மக்கள்தொகையும் முக்கிய காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள்தொகையை சீனா கட்டுப்படுத்த தொடங்கியது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு கடுமையான அபராதமும் கூட விதிக்கப்பட்டது. குறிப்பாக 1993ல் சீனாவில் ஒரு குழந்தை என்ற கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் மக்கள்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த கருத்தடை சாதனங்களுக்கு வரி பூஜ்ஜியமாக்கப்பட்டது. இதனால் மக்கள்தொகை இந்தியாவை ஒப்பிடும்போது சரிய தொடங்கியது.
இதனால் சீனா தனது நிலைப்பாட்டை மாற்ற தொடங்கியது. மக்கள் தொகை அதிகரிக்க முடிவு செய்தது. இதனால் 2015ல் இரட்டை குழந்தைகள் கொள்கை கொண்டு வரப்பட்டது. ஒரு தம்பதி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2021ல் மூன்று குழந்தை கொள்கை அமலுக்கு வந்தது.
அதுமட்டுமின்றி பெய்ஜிங் போன்ற நகரங்களில் மகப்பேறு விடுமுறை 128 நாட்களில் இருந்து 158 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. அதோடு பெண் கர்ப்பமாக இருந்தால் அவரது கணவருக்கு 30 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டது. இருப்பினும் கூட பல தம்பதிகள் குழந்தைகள் பெற்றெடுக்க ஆர்வம் காட்டவில்லை. குழந்தை வளர்ப்பது, அதிகப்படியான செலவு உள்ளிட்டவற்றை காரணமாக வைத்து பலரும் குழந்தை பெற்றெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
2019ல் 14.7 மில்லியன் (1 கோடியே 47 லட்சம்) என்ற அளவில் இருந்து பிறப்பு விகிதம், 2024 ல் 9.5 மில்லியன் (95 லட்சம்) ஆக சரிந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும். இந்நிலையில் தான் சீனா தற்போது காண்டம் உள்பட பிற கருத்தடை மாத்திரை, மருந்துகள், கருத்தடை சாதனங்கள் மீதான வரியை அதிகரித்துள்ளது. இந்த பொருட்களின் மீதான ‛வாட்' எனும் மதிப்புக்கூட்டு வரி 13 சதவீதம் வரை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி 2026 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலையில் கிடைத்து வந்த ஆணுறைகள், கருத்தடை சாதனங்கள் புதிய வரி விதிப்புக்கு பிறகு விலை உயரும்.
இதனால் அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரியும். இது குழந்தை பிறப்பை அதிகரிக்கும் என்று சீன அரசு நம்புகிறது. சீனாவின் இந்த வரி உயர்வுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பலரும் முன்கூட்டியே இப்போது இருந்தே ஆணுறைகள், கருத்தடை சாதனங்களை வாங்கி சேமித்து வைக்க தொடங்கி உள்ளனர். இதுதொடர்பான போட்டோக்களை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications