For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மாட்டிறைச்சி"யில் கொரோனா.. அடுத்த குண்டை போட்ட சீனா.. கதி கலங்கும் உலக நாடுகள்..!

மாட்டிறைச்சியில் கொரோனா வந்துவிட்டதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: "எங்க நாட்டுக்கு வந்து இறக்குமதியான மாட்டிறைச்சியில் கொரோனா வைரஸ் இருக்கிறது" என்று சீனா வைத்துள்ள குற்றச்சாட்டை கண்டு உலக நாடுகள் மறுபடியும் அதிர்ந்து போயுள்ளன.

Recommended Video

    மாட்டிறைச்சியில் கொரோனா மீண்டும் பீதியை கிளப்பும் சீனா

    சீனாவில் இன்னும் கொரோனா ஒழியவில்லை.. இப்படி ஒரு தொற்று கிளம்பியதே அங்குள்ள மீன் மார்க்கெட்டில் இருந்துதான் என்பதை உலக நாடுகளும் மறக்கவில்லை... அதனால்தான் இன்றுவரை சீனா மீதான கோபமும் குறையவில்லை.
    இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ஷாக் தகவல் வெளிவந்துள்ளது.. அதாவது, பிரேசில், நியூசிலாந்து, பொலிவியா போன்ற நாடுகளில் இருந்து சீனாவிற்கு இறக்குமதியான பதப்படுத்தப்பட்ட மாட்டு இறைச்சியில் கொரோனா வைரஸ் இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாம்.

    மாட்டிறைச்சி

    மாட்டிறைச்சி

    லாங்ஸூ நகரில் சவுதி இறால் மீனிலும், வுஹான் நகரில் பிரேசிலின் மாட்டுக்கறியிலும், ஷாங்டாங், ஜியாங்சு போன்ற மாகாணங்களில் அர்ஜெண்டினாவின் மாட்டுக்கறியிலும், ஜெங்ஸுவு நகரில் அர்ஜெண்டினாவின் பன்றி கறியிலும், இந்தோனேசியாவிலிருந்து வந்த மீன்களிலும் இந்த கொரோனா தொற்றுக்கான வைரஸ் பாதிப்பு இருந்தது என்று சீன அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இதுதான் தற்போது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம், உலகிலேயே அதிகமாக மாட்டிறைச்சியை வாங்கும் நாடு சீனாதான்.. இதற்கு அடுத்தபடியாகத்தான் பிரேசில், அர்ஜெண்டினா போன்ற நாடுகள் உள்ளன. சீனாவுக்கு வந்த இந்த இறைச்சி வகைகள் எல்லாமே ஷாங்காய் நகரின் யாங்ஷான் துறைமுகத்தின் வழியாகவே வந்துள்ளன.. இருந்தாலும், அந்த நிறுவனங்கள் பெயர்கள் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.

     வைரஸ் பாதிப்பு

    வைரஸ் பாதிப்பு

    இப்படிப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் வைரஸ் பாதிப்பு குறைவு என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.. மக்களுக்கு உணவு அல்லது உணவு பேக்கேஜிங்கிலிருந்து கொரோனா பரவுவது என்பது சாத்தியமில்லை என்றும் உறுதியாக சொல்கிறது.. அதுமட்டுமல்ல, சீனாவின் நியூக்ளிக் அமில சோதனைகள் இறந்த வைரஸின் மரபணு துண்டுகளை எடுக்கக்கூடும் என்றும், அதனால் அவை தொற்று நோயாக இருக்காது என்றும் நிபுணர்கள் ஆணித்தரமாக கூறுகிறார்கள்.

     உணவு பேக்கேஜ்

    உணவு பேக்கேஜ்

    ஆனால், உணவு பேக்கேஜிங்கில் இருந்து கொரோனா வருவது சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத்தடுப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாகவும் சீனா குற்றஞ்சாட்டுகிறது. இப்படி சீனா சொல்லும் குற்றச்சாட்டுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்துவிட முடியாது.. அதனால், எந்த இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன்மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும், கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

    English summary
    China finds corovnavirs on frozen beef tripe from other countries
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X