கிம்மின் அப்பாவுக்கு சிகிச்சை அளித்த சீன மருத்துவர்கள்.. அப்போ அமெரிக்கா சொன்னது உண்மைதானோ?
பெய்ஜிங்: கடந்த 2008ஆம் ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தைக்கு சீன மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது சீன மருத்துவர்கள் குழு வடகொரியா சென்றுள்ளதால் அவர்கள் கிம்மிற்கு சிகிச்சை அளிக்க சென்றிருக்கலாம் என தெரிகிறது.
Recommended Video
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொது வெளியில் தோன்றுவதில்லை. இந்த நிலையில் அவருக்கு கடந்த 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இதனிடையே கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. எனினும் இதுகுறித்து வடகொரியா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

உடல்நிலை
இதுகுறித்து தென்கொரியாவிடம் கேட்டபோது கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்கா கூறுவது போல் அந்நாட்டில் எந்த வழக்கத்துக்கு மாறான செயல்களும் எங்களுக்கு தெரியவில்லை என கூறியது. இந்த நிலையில் வடகொரியாவின் நட்பு நாடான சீனா கிம்மின் உடல்நிலை குறித்து ஆலோசனைகளை வழங்க மருத்துவ நிபுணர்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியா
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச லியாசன் துறையின் அதிகாரி ஒருவரும் அவர்களுடன் வியாழக்கிழமை வடகொரியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. லியாசன் துறை என்பது இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவை வலுபடுத்தும் துறையாகும். இதுகுறித்து சீன நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கேட்டபோது அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.

பரம்பரை நோய்
கிம் ஜாங் உன்னிற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதன் பிறகு புகைப்பழக்கம் மற்றும் கூடுதல் எடையால் அவர் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதய நோய் என்பது கிம் குடும்பத்தின் பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு கிம் ஜாங் உன்னின் தந்தைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டது.

தென் கொரிய ஊடகங்கள்
அப்போது பிரெஞ்ச் மருத்துவர்களுடன் இணைந்து சீன நாட்டு மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்ததாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது வடகொரியாவுக்கு சீன மருத்துவக் குழு சென்றுள்ளதை பார்த்தால் உண்மையிலேயே கிம்மின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதா என்ற சந்தேகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வலுக்கிறது.

உறுதுணையாக இருந்த சீனா
கிம்மின் தந்தை 2011 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தவுடன் கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கு அவர் 4 முறை சென்றுள்ளார். வடகொரியா அணு ஆயுத சோதனையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போது சீனா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்த போது சீனா அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications