வலை விரிக்கும் சீனா.. வசமாக சிக்கும் தென் அமெரிக்க நாடு? போர் வெடிக்கும் அபாயம்! பதறும் உலக நாடுகள்
பெய்ஜிங்: தென் அமெரிக்காவுக்குள் நுழையச் சீனா ஒரு பக்காவான திட்டத்தை வகுத்துள்ள நிலையில், இது அமெரிக்கா சீனா இடையே மறைமுக போரை உருவாக்கக் கூடும் எனச் சர்வதேச வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த பல காலமாகவே நல்லுறவு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருவது. அனைவருக்கும் தெரியும்.

இதற்கிடையே சீனா இப்போது செயல்படுத்தும் ஒரு பிளான் சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக இது அமெரிக்காவுக்கு பெரிய சிக்கலைத் தரலாம் என அஞ்சப்படுகிறது.
துறைமுகம்: தென் அமெரிக்காவில் சீனா ஒரு துறைமுகத்தை உருவாக்கி வருகிறது. இத்திட்டத்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என அஞ்சப்படுகிறது.
அதாவது தென் அமெரிக்காவில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று பெரு.. முழுக்க முழுக்க சுற்றுலாத் துறையை நம்பி இருக்கும் இந்த நாட்டின் மக்கள்தொகையே வெறும் 3 கோடி தான்.. இங்குள்ள சான்கேய் என்ற நகரில் தான் சீனா இப்போது ஒரு பிரம்மாண்ட துறைமுகத்தை உருவாக்கி வருகிறது.. இந்த ஆண்டு இறுதியில் இந்த துறைமுகத்தைச் சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைக்க இருக்கிறார்.
மிக முக்கிய திட்டம்: சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்படும் இந்த துறைமுகம் சீனாவின் மிக முக்கிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்கச் சந்தைக்குள் நுழைய இது சீனாவுக்கு பக்காவான ஒரு வாய்ப்பை தருகிறது. இந்த துறைமுகம் திறக்கப்பட்டால் ஆசியா மற்றும் தென் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் மேம்படும். மேலும், சீனாவில் இருந்து தென் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் அதிகரிக்கும்.
தென் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை உள்ள மற்ற துறைமுகங்களால் பெரிய கப்பல்களைக் கையாள முடியாது. ஆனால், இந்த துறைமுகம் 60 அடி ஆழம் இருப்பதால் மெகா கப்பல்களையும் இது ஈஸியாக கையாளும் என்று கூறப்படுகிறது.
மொத்த கண்ட்ரோல் சீனாவிடம்: தென் அமெரிக்காவில் சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்கா தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த துறைமுகம் ஒரு சவாலாக உள்ளது. இதைச் சீனா கட்டுவதால் முக்கிய கட்டுப்பாடுகளும் அவர்கள் வசம் தான் இருக்கும். இதனால் தென் அமெரிக்காவின் வளங்கள் மீதான சீனாவின் பிடி அதிகரிக்கும்.
வெடிக்கும் போர்: அதாவது இயற்கை வளங்களால் நிரம்பி இருக்கும் இந்த பிராந்தியத்தைச் சீனாவால் எளிதாக அணுக முடியும். இதன் மூலம் இங்குள்ள இயற்கை வளங்களைச் சீனாவால் எளிதாக எடுக்க முடியும். இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான உறவு மிக மிக மோசமான இருக்கும் நிலையில், இந்த துறைமுகம் அதை மேலும் மோசமாக்கும். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே இது மறைமுக போரைக் கூட தொடங்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதேநேரம் பெரு நாடு இது தங்களுக்கு ஆசிய மார்கெட்டை திறந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. பெரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழம், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை இந்த துறைமுகம் வந்தவுடன் எளிதாக ஆசிய மார்கெட்டிற்கு அனுப்ப முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நினைவிருக்கா: இருப்பினும், இத்திட்டத்தால் முழு பயனையும் சீனாவே அடையும் என் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், சரியாகக் கையாளவில்லை என்றால் இந்த நிலைமை பெருவுக்கு மொத்தமாக எதிராக மாறிவிடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஏனென்றால் இப்போது பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் சீனா இதுபோன்ற திட்டங்களைத் தான் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications