உலக அளவில் பறக்கும் ரஜினியின் "கொடி"... சீன செய்தி சேனலும் விதிவிலக்கல்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்துள்ள செய்தி இந்தியாவை கடந்து சீனாவின் முன்னணி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க போவதாக கடந்த 26-ஆம் தேதி தெரிவித்தார். இதையடுத்து அவர் என்ன அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தை கடந்து இந்தியா முழுவதும் இருந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் அவ்வப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தகவல்களை இங்குள்ள நண்பர்களின் மூலம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

China's news channel relays about Rajini's political entry

இந்நிலையில் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி என அனைத்து செய்தி நிறுவனங்களும், ஊடகங்களும் இந்த செய்தியை பிரேக்கிங் செய்தியாக வெளியிட்டன.

ஆனால் கடல் கடந்த சீனாவின் முன்னணி செய்தி நிறுவனமான சீனா ஜின்ஹூவா நியூஸ் ஏஜென்சி ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

ரஜினிக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
China's leading news channel China Xinhua News relays that Indian film star Rajinikanth announces entry into politics, to launch his own party.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற