For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் பதற்றத்தை தணிக்க.. 5 உடன்படிக்கைகளை ஏற்க தயார்.. பணிந்தது சீனா!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: எல்லையில் பதற்றத்தை தணிக்க ரஷ்யாவில் இந்தியா- சீனாவுடனான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட 5 புதிய உடன்படிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் வீ தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீனா அடிபணிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே எல்லையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதுகுறித்து ஏற்கெனவே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவை எச்சரிக்கும் விதத்தில் மாஸ்கோவில் பேசியிருந்தார்.

மேலும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் ரஷ்யாவில் நடந்த மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் பங்கேற்ற சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அருணாச்சலத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை இன்று ஒப்படைக்கிறது சீனா அருணாச்சலத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை இன்று ஒப்படைக்கிறது சீனா

2 மணி நேரம்

2 மணி நேரம்

2 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் செய்த ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே மோதல் உருவாகக் கூடாது. எல்லையில் உள்ள படைகள் வாபஸ் பெற வேண்டும். எல்லை பிரச்சினை தொடர்பான ஒப்பந்தங்கள், விதிகளை மதிக்க வேண்டும் என்பன உள்பட 5 உடன் படிக்கைகள் கொண்ட புதிய ஒப்பந்தம் இருநாடுகளிடையே ஏற்பட்டது.

சீனா

சீனா

இந்த ஒப்பந்தத்தை சீனா ஏற்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோவுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எல்லைக் கோட்டு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துருப்புகளும் ஆயுதங்களும் திரும்ப பெறப்பட வேண்டும்.

உறவுகள்

உறவுகள்

இந்தியா- சீனா இடையேயான உறவுகள் குறித்து ஒட்டுமொத்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. எல்லையில் பதற்றம் குறித்த விவரங்களை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் கேட்டு வருகிறார்கள். எல்லையில் ஏற்படும் பிரச்சினை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

முக்கியமானது

முக்கியமானது

நேற்று முன் தினம் ஜெய்சங்கருடன் நீண்ட நேரம் உரையாடினேன். எல்லையில் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்துழைப்பு நல்கவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். சமரச நடவடிக்கைகளை ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

Recommended Video

    Border-ல் பதற்றத்தை தணிக்க China தயார் என அறிவிப்பு | Oneindia Tamil
    இந்தியா சார்பில்

    இந்தியா சார்பில்

    எல்லையில் விதிமீறல்களை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளுக்கு சீனா அடிபணிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எல்லையில் சீன துருப்புகள் எல்லை மீறுவதாக இந்தியா சார்பில் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China is ready to take 5 point consensus to deescalate tensions in LAC, says China Foreign Minister Wang Yi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X