For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோத வேண்டாம்.. நல்லதல்ல.. சீனாவிற்கு எதிராக கொந்தளிக்கும் சொந்த மக்கள்.. கலக்கத்தில் ஜிங்பிங்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவிற்கு எதிராக அந்த நாட்டை சேர்ந்த சொந்த மக்களே தற்போது கொதித்தெழுந்து இருக்கிறார்கள். இந்தியாவுடன் சீனாவின் மோதலை அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Recommended Video

    China- க்கு எதிராக கொந்தளிக்கும் சொந்த மக்கள்

    இந்தியாவிற்கு எதிராக சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதிலும் எல்லையில் தொடர்ந்து சீனாவின் ராணுவம் அத்துமீறி வருகிறது. கல்வான் பகுதியில் தற்போது இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிற்கு எதிராக சீனா போருக்கு தயார் ஆகி வருகிறது என்று கூட செய்திகள் வந்தது. இதனால் இரண்டு நாட்டிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஆபரேஷன் DBO.. மிக முக்கிய இடத்திற்கு குறி வைக்கும் சீனா.. லடாக்கில் புதிய டிவிஸ்ட்.. என்ன நடக்கிறது?ஆபரேஷன் DBO.. மிக முக்கிய இடத்திற்கு குறி வைக்கும் சீனா.. லடாக்கில் புதிய டிவிஸ்ட்.. என்ன நடக்கிறது?

    என்ன பதற்றம்

    என்ன பதற்றம்

    இந்த நிலையில் சீனாவிற்கு எதிராக அந்த நாட்டை சேர்ந்த சொந்த மக்களே தற்போது கொதித்தெழுந்து இருக்கிறார்கள். இந்தியாவுடன் சீனாவின் மோதலை அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மொத்தம் 5 விதமாக புகார்களை வைத்து வருகிறார்கள். சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான weiboல் அவர்கள் இந்த புகார்களை வைத்து வருகிறார்கள். சீனா மொழியில் வைக்கப்படும் இந்த புகார்கள் தற்போது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    இப்போது போர் வேண்டாம்

    இப்போது போர் வேண்டாம்

    அதில் முதலாவதாக இந்தியா உடன் போர் வேண்டாம் என்று சீனர்கள் போஸ்ட் செய்து வருகிறார்கள். இந்தியாவுடன் போருக்கு சென்றால் பொருளாதார ரீதியாக பிரச்சனை ஏற்படும். நமக்கு இப்போதுதான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் ஹாங்காங், தைவான் பிரச்சனை வேறு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா போன்ற வளர்ந்த நாடுடன் மோதினால் நமக்குத்தான் பிரச்சனை ஏற்படும் என்கிறார்கள்.

    இந்தியா உலக நாடுகள் உறவு

    இந்தியா உலக நாடுகள் உறவு

    அதேபோல் இந்தியா உலக நாடுகள் உடன் நல்ல உறவை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளது. யுகே இந்தியாவுடன் மிக நெருக்கமாக உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தியாவை தீவிரமாக ஆதரிக்கிறது. ஆனால் சீனாவிற்கு இப்படி ஆதரவு இல்லை. இதனால் சீனா தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க கூடாது என்கிறார்கள்.

    ரஷ்யா ஆதரவு

    ரஷ்யா ஆதரவு

    இந்தியாவிற்கு ரஷ்யாவின் ஆதரவும் இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து போர் ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது . ரஷ்யாவும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாகி சேர அழைக்கிறது. இதனால் ரஷ்யா சீனாவை விட இந்தியாவிற்குதான் நெருக்கமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது. ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் சீனாவுடன் உறவை முறிக்கும். இதனால் சீனா அவசரப்பட கூடாது.

    சீனா மொத்தமாக தனித்து விடப்படும்

    சீனா மொத்தமாக தனித்து விடப்படும்

    கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பல சீனா மீது கோவமாக இருக்கிறது. நாம்தான் கொரோனாவை பரப்பியது என்று கூட பல நாடுகள் நினைக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியா போன்ற அமைதியான நாடுடன் போருக்கு செல்ல கூடாது. அப்படி சென்றால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலக அளவில் சீனா தனித்து விடப்படும் என்று அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    கட்டுப்பாடு அதிகரிப்பு

    கட்டுப்பாடு அதிகரிப்பு

    இந்தியாவிடம் பெரிய அளவில் படைகள் உள்ளது. லடாக்கில் நம்மை விட இந்தியா வலிமையுடன் இருக்கிறது. மலையில் தாக்குதல் நடத்தும் திறமையான படைகள் அவர்களிடம் இருக்கிறது. சீனா இந்தியாவுடன் போருக்கு சென்றால், சீனாவில் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். சீனாவில் எங்களுக்கு இப்போதே போதிய சுதந்திரம் இல்லை என்று அந்நாட்டு மக்கள் புகார் அளிக்க தொடங்கி உள்ளனர்.

    நீக்குகிறது

    நீக்குகிறது

    சீனாவில் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக எழுதுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இதையும் மீறி தற்போது அரசுக்கு எதிராக எதிர்ப்பு எழுந்துள்ளது அதிபர் ஜிங்பிங்கை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ஜிங்பிங் கடும் கோபத்திலிருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இது போன்ற போஸ்ட்களை தற்போது சீனாவே நீக்கி வருகிறது. அதாவது weiboல் போடப்படும் போஸ்ட்களை சீனா நீக்கி வருகிறது.

    English summary
    China standoff with India: Own citizen of Beijing warns the country against war with Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X