ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க.. சீனா போட்ட சூப்பர் உத்தரவு.. திகைத்து நிற்கும் பொதுமக்கள்
பெய்ஜிங்: சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேம்கள் விளையாட வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு உள்பட சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க சீனா இந்த சூப்பர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று பரவிய பின்னர் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மொபைலில் வீடியோகேமிற்கு அடிமையாகி கிடக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.
இளைஞர்களிடம் எவ்வளவு சொல்லியும் வீடியோ கேம்கள் விளையாடுவதை நிறுத்துவதில்லை. பெற்றோர்கள் சிறுவர்கள் இடையே வீடியோ கேம்களால் சண்டை அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் மீது சிறுவர்கள் வெறுப்பு காட்டும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு போதையாக மாறிவிட்டது

சீனா அதிரடி
பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட ஆன்லைன் கேம்கள் பல, சிறுவர்களை அடிமையாக்கி, விளம்பர வருவாயை பெருக்கி வருகின்றன. இந்நிலையில் இளைஞர்கள், சிறுவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போதை போல் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க நடவடிக்கையை சீனா தொடங்கி உள்ளது.

3 நாட்கள் மட்டுமே
சீனா தனது நாட்டின் கோடிக்கணக்கான இளம் வயது சிறார்களுக்கு ஒரு புதிய விதியைக் கொண்டுள்ளது: பள்ளி நாட்களில் ஆன்லைன் வீடியோ கேம்கள் இனி விளையாட முடியாது என்றும் வெள்ளிக்கிழமை, வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்.

கடும் கட்டுப்பாடு
இளைஞர்கள் வீடியோ கேம் போதையில் இருப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் சீனா இந்த கடுமையான புதிய நடவடிக்கைகளை திங்கள்கிழமை வெளியிட்டது. சீனாவின் நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின் படி, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் திங்கள் மற்றும் வியாழன் இடையே ஆன்லைன் வீடியோ கேம்ஸ் விளையாட கூடாது.

மக்கள் எதிர்பார்ப்பு
அதேநேரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் ( வாரத்தின் மற்ற மூன்று நாட்களிலும்) பொது விடுமுறை நாட்களிலும், அவர்கள் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கட்டுப்பாடுகள் இந்தியாவிலும் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications