For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரர்களை ரகசிய இடத்திற்கு அனுப்பிய பிஎல்ஏ.. நிமிடங்களில் படைகளை குவித்த சீனா.. பதற வைக்கும் பின்னணி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன ராணுவ படையால் நிமிடங்களில் எல்லையில் படைகளை குவிக்க முடியும் என்று அந்நாட்டு பிஎல்ஏ ராணுவப்படை தெரிவித்து உள்ளது.

Recommended Video

    சின்ன தாக்குதல் கூட இல்லாமல் சமாளித்த இந்தியா

    லடாக் எல்லையில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் பதற்றமும் ஏற்பட தொடங்கி உள்ளது. இந்தியா எல்லையில் அமைதியை விருப்பும் நிலையிலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன் லடாக் எல்லையில் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் பின் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் கூட சீனா தொடர்ந்து எல்லையில் அத்துமீற திட்டமிட்டு வருகிறது.

    மாபெரும் போர் பயிற்சி.. தயார் நிலையில் வீரர்கள்.. பேச்சுவார்த்தைக்கு பின்பும் வேலையை காட்டிய சீனா!மாபெரும் போர் பயிற்சி.. தயார் நிலையில் வீரர்கள்.. பேச்சுவார்த்தைக்கு பின்பும் வேலையை காட்டிய சீனா!

    நேற்று என்ன நடந்தது

    நேற்று என்ன நடந்தது

    நேற்று சீனா தனது ஹூபேய் பகுதியில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டது. அதாவது ஹூபேய் பகுதியில் இருக்கும் தனது படைகளை சீனா ராணுவம் ரகசிய இடத்திற்கு அனுப்பி உள்ளது. ஹூபேய் பகுதியில் இருந்து பல்வேறு போக்குவரத்து சாதனைகளை பயன்படுத்தி சீனா தனது படைகளை எல்லைக்கு அனுப்பி உள்ளது. மிக குறைந்த நேரத்தில் தனது படைகளை சீனா இப்படி ரகசிய இடத்திற்கு அனுப்பி உள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    சீனாவின் ராணுவ மேஜர் மாவோ லெய் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், எங்கள் ராணுவம் மிக தயாராக இருக்கிறது. வேகமாக படைகளை அனுப்பி சாதனை செய்து இருக்கிறோம். எங்களால் எல்லைக்கு நிமிடங்களில் படைகளை குவிக்க முடியும். இது மிகப்பெரிய சாதனை. மிக எளிதாக படைகளை எல்லைக்கு கொண்டு செல்லும் வழியை நாங்கள் கண்டுபிடித்து இருக்கிறோம், என்று அவர் கூறி இருக்கிறார்.

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் வீரர்கள் மக்கள் பயணிக்கும் விமானங்களில் அமர்ந்து வேறு ஒரு இடத்திற்கு செல்வது இதில் பதிவாகி உள்ளது. ஹூபேய் பகுதியில் இருந்து இவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது ரகசியமாக உள்ளது. வீடியோ, புகைப்படத்தை சீன ராணுவம் வேண்டும் என்றே வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இடம் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    ஆயிரம் கிலோ மீட்டர்

    ஆயிரம் கிலோ மீட்டர்

    ஆனால் சீனாவின் ராணுவ மேஜர் மாவோ லெய் இது தொடர்பாக சில விஷயங்களை கூறி உள்ளார். அதன்படி நாங்கள் படைகளை ஆயிரத்திற்கும் அதிகமான தூரத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம். இதை எல்லாம் மிக குறைவான நிமிடங்களில் செய்து இருக்கிறோம். எங்கள் வீரர்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    China transported its troops within minutes to a secret place amid standoff with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X