"ஒழுங்கா இருங்க".. பாகிஸ்தானை எச்சரித்த சீனா! அமெரிக்கா போட்ட உத்தரவு.. சம்பவம் செய்த இந்தியா
பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா அந்த அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பாகிஸ்தானை சீண்டும் வகையில் பதிலளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
காலம் காலமாக பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு வளர்ப்பதையே பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாதிகளை சப்ளை செய்யும் பாகிஸ்தான் நம் நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 ஆண்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' (ஆர்பிஃஎப்) பொறுப்பேற்றது. பதிலடிக்கு நம் நாடு தயாராகி வந்த நிலையில் அந்த அமைப்பு பின்வாங்கியது. பஹல்காம் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அறிவித்தது. ஆனால் உண்மையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
இந்நிலையில் தான் டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' அமைப்பை அமெரிக்கா தனது பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 18 ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டது. ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தானுக்கு பின்னடைவைாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த செயலை நம் நாடு வரவேற்றது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவை பாராட்டினார்.
இந்நிலையில் தான் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' அமைப்பை பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது பற்றி சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‛‛சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உறுதியாக எதிர்க்கிறது. ஏப்ரல் 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலை (பஹல்காம் தாக்குதல்) கடுமையாக கண்டிக்கிறது. பிராந்திய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புக்காக சேர்ந்து செயல்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் பெயரை கூறாமல் அவர் பயங்கராதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகள். பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை சீனாவிடம் இருந்து வாங்கியது தான். இருநாடுகள் இடையே நல்ல உறவு இருக்கிறது. இருப்பினும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சீனா கண்டித்தது. ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நாம் தாக்கியபோது சீனா அந்த நாட்டுக்கு உதவியதும்.
நம்நாட்டின் ஏவுகணை பாதைகளை கண்டறியந்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது. இப்படியான சூழலில் சீனா இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications