For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரும் கூட்டு சேர கூடாது.. ஓநாய் வீரர்கள் மூலம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் சீனா.. புதிய பிக்பாஸ்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த சீனா முடிவெடுத்து உள்ளது.

அமெரிக்கா சீனா இடையிலான சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. சீனாவில்தான் கொரோனா செயற்கையாக தோன்றியது என்று புகார் அளித்த அமெரிக்கா, தற்போது உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று கூறியுள்ளது.

இதனால் சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா முயன்று வருகிறது. சீனாவிற்கு எதிராக உலக நாடுகளை திருப்ப அமெரிக்கா கடுமையாக முயன்று வருகிறது.

பிசாசுத்தனமான அடி.. ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு.. ரஜினி திடீர் அட்வைஸ்!பிசாசுத்தனமான அடி.. ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு.. ரஜினி திடீர் அட்வைஸ்!

என்ன திட்டம்

என்ன திட்டம்

இந்த நிலையில் உலக நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. அதாவது அமெரிக்கா யாரிடம் எல்லாம் நட்பாக இருக்கிறதோ அவர்களை எல்லை பொருளாதார ரீதியாக நெருக்க சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக ஓநாய் வீரர்கள் எனப்படும் ராஜாங்க ரீதியான பேச்சாளர்களை, நிர்வாகிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. இவர்களை பல நாடுகளுக்கு சீனா அனுப்பி உள்ளது.

ஓநாய் வீரர்கள் யார்

ஓநாய் வீரர்கள் யார்

அதன்படி ஓநாய் வீரர்கள் என்பவர்கள் சீனா சார்பாக வெளிநாடுகளில் ஒப்பந்தங்களை செய்யும், பேச்சுவார்த்தைகள் செய்யும் ராஜாங்க பணியாளர்கள். அதாவது வெளியுறவுத்துறை செயலாளர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நபர்கள். இவர்களை வைத்து அமெரிக்காவிற்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடுகளையே திசை திருப்ப சீனா முடிவெடுத்து உள்ளது.

என்ன ஆதாரம்

என்ன ஆதாரம்

இதற்கான பணிகள் முன்பே நடக்க தொடங்கிவிட்டது. அதன்படி முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சீனா குறைக்க முடிவு செய்துள்ளது. சீனாதான் உலகில் பெரிய சந்தை. சீனாவை நம்பித்தான் அமெரிக்காவின் நட்பு நாடுகள் பல இருக்கிறது. இந்த நாடுகளிடம் இருந்து இறக்குமதியை தடை செய்ய சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் முதல் குறி அமெரிக்காவின் நண்பன் ஆஸ்திரேலியாதான்.

ஏற்கனவே தடை

ஏற்கனவே தடை

அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டுக்கறியை ஏற்கனவே சீனா தடை செய்துவிட்டது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டாம் என்று சீனர்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கனடா, யுகே, ஜெர்மனி, நெதர்லாந்து , சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களை சீனா தடை செய்துள்ளது. இனியும் செய்யும். அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்ததற்கு தண்டனையாக இப்படி சீனா செய்கிறது.

என்ன தண்டனை

என்ன தண்டனை

எங்கள் நாட்டில் உங்கள் பொருட்களை விற்க வேண்டும் என்றால் நீங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எங்கள் சந்தை வேண்டும் என்றால் வாஷிங்க்டன் உடன் நெருக்கமாக இருக்க கூடாது என்று மிரட்டி வருகிறது. தங்கள் நாட்டின் ஓநாய் வீரர்கள் மூலம் சீனா இது போன்ற பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறது. இதில் ஓரளவு சீனா ஏற்கனவே வெற்றிபெறவும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வகையில் வெற்றி

எந்த வகையில் வெற்றி

உதாரணமாக சீனாவின் இந்த செயலுக்கு பின் ஆஸ்திரேலியா தென் சீன கடல் எல்லையில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொண்டு உள்ளது. அங்கு அமெரிக்காவிற்கு ஆதரவாக ஆஸ்திரேலியா இருந்தது. இன்னொரு பக்கம் சீனா எங்கள் முக்கிய எதிரி இல்லை என்று நேட்டோ படைகள் கூறியுள்ளது. இதனால் நேட்டோ படைகள் மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து 20 ஆயிரம் நேட்டோ படை வீரர்களை அமெரிக்கா இதனால் திரும்ப பெற்றுள்ளது.

பொருளாதார ரீதியான தாக்குதல்

பொருளாதார ரீதியான தாக்குதல்

அதாவது அமெரிக்கா அதிகம் நம்பி இருக்கும், நேட்டோ குழுவை சீனா கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியில் இருக்கிறது. அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருக்கும் நாடுகளை இப்படி பொருளாதார ரீதியாக சீனா தாக்கி வருகிறது. உலகில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீனா பயன்படுத்த தொடங்கி உள்ளது. சீனா உலக நாடுகளை மட்டுமின்றி இந்தியாவிடமும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்தது.

என்ன எச்சரிக்கை

என்ன எச்சரிக்கை

அதன்படி அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் ஆவதை நிறுத்த வேண்டும். ஆசியாவின் நலன் குறித்தும், அண்டை நாடுகளுடனான நட்பு குறித்தும் இந்தியா கவனம் கொள்ள வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. ஆனால் இதை எல்லாம் இந்தியா பொருட்படுத்தவில்லை. அமெரிக்காவுடன் இந்தியா இப்போதும் நெருக்கம் காட்டி வருகிறது. அமெரிக்க தேர்தலை மையமாக வைத்து சீனா அமெரிக்காவை உருகுலைக்க முயன்று வருகிறது.

யார் பிக்பாஸ்

யார் பிக்பாஸ்

இனி உலகின் பிக்பாஸ் நான்தான், அமெரிக்கா இல்லை என்று எப்படியாவது நிரூபிக்க சீனா முயல்கிறது. ஆனால் இந்தியா மட்டும் இன்னும் சீனாவிடம் நெருங்கவில்லை. இந்தியா எப்போதும் போல சீனாவை கண்டு பயப்படாமல் அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்தி வருகிறது. அதோடு ஜி7 குழுவில் இணையவும் இந்தியா ஒப்புக்கொண்டு உள்ளது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளை எப்படியாவது வழிக்கு கொண்டு வர சீனா முயன்று வருகிறது.

English summary
China will use it Wolf Warriors against the US and its allies to pressurize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X