சீனாவுடன் கை கோர்க்கும் பாக்.! உற்று நோக்கும் இந்தியா.. பிரச்சனைகளுக்கு வாய்ப்பு!
பெய்ஜிங்: இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுவதை போல, பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்து வருகிறது. தற்போது சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சில முக்கிய ஒப்பந்தங்களை அந்நாட்டுன் போட்டியிருக்கிறார். இது இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானுக்கு சீனா கடந்த 2013ம் ஆண்டு முதல் பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் உள்கட்டமைப்பு விவகாரங்களில் அதிக முதலீடுகளை செய்திருக்கிறது.

அந்த வகையில் இந்த முதலீடுகள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன. பிப்.4-8ம் தேதி வரை பாகிஸ்தான் அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணித்தின் ஒரு பகுதியாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக, ரயில்வே உள்ளிட்ட உள் கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் சுரங்க திட்டங்களை அதிகரிப்பது என ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
இந்தியாவுடன் சேர்ந்துதான் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது என்றாலும், தற்போது அங்குள்ள ரயில்வே நெட்வொர்க் இன்னும் மேம்படுத்தப்படாமல் அப்படியேதான் இருக்கிறது. இதனை நவீனமயப்படுத்த அடுத்த சில ஆண்டுகளுக்கு சீனா நிதியை ஒதுக்கி உதவி செய்யும். அதேபோல குவாதர் துறைமுகத்தை மேம்படுத்தவும் சீனா நிதி ஒதுக்க இருப்பதாக சின்ஹுவா செய்தி(Xinhua news) ஊடகம் தெரிவித்திருக்கிறது.
இது தவிர சீனாவில் ஆசிய குளிரகால போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இந்த தொடக்க நிகழ்ச்சியில் பாக். அதிபர் ஆசிப் அலி சர்தாரி பங்கேற்கிறார். இவை அனைத்தும் சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக இருப்பதை காட்டுகின்றன.
இதில் சீனாவுக்கு இருக்கும் சாதகங்கள் என்னவெனில், பட்டுப்பாதை திட்டத்தை எதிர்ப்பின்றி செயல்படுத்த முடியும் என்பதுதான். இது சீனாவின் நூற்றாண்டு கணவு. பண்டைய சீனர்கள் குறிப்பிட்ட சில பாதை வழியாக உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். அந்த பாதையை தற்போது நவீன வர்த்தகத்திற்கு பயன்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது.
இந்த பாதை பாகிஸ்தான் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறது. இந்த வழித்தடத்தில் ரயில் பாதையை அமைத்து அதன் மூலம் சீன பொருட்களை சப்ளை செய்ய பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அவசியமாகும். அந்த வகையில், பாகிஸ்தானை கைக்குள் போட்டுக்கொள்ள அதன் வறுமையை சீனா பயன்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இன்று ஏற்படுத்தப்பட் ஒப்பந்தங்கள் கூட, சீனாவின் நலனை மனதில் வைத்துதான் போடப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.
அதே நேரம், ஆசியாவில் சீனாவுக்கு நிகரான ஒரு நாடாக இந்தியா வளர்ந்து வளர்ந்து வருகிறது. சீனா மாதிரி, இந்தியா மாற வேண்டும் எனில் இன்னும் சில பத்தாண்டுகள் வரை ஆகலாம். எனவே இந்தியாவுக்கு நிகராக பாகிஸ்தானை வளர்த்தெடுக்க சீனா முயன்று வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆக பாக். அதிபர் மற்றும் சீன அதிபர் சந்திப்பில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
பாகிஸ்தான் நம்மை விட பெரிய ஆளாய் வளர்ந்து வந்தால், அது இந்திய இறையான்மைக்கு அச்சுருத்தலாக இருக்கும் என்றும் வலதுசாரிகள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த சந்திப்பும், ஒப்பந்தங்களும் முக்கியமானதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications