For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதென்ன மகளுக்கு ‘பேஷனா’ பேரு... உடனே மாத்துங்க... சீனத் தந்தைக்கு கோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: குடும்பப் பெயர் சேர்க்காமல் மகளுக்கு வைக்கப்பட்ட பெயரை உடனே மாற்றும் படி தந்தை ஒருவருக்கு சீன கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது பெற்றோரின் விருப்பம் தான். ஆனால், இதற்கு மாறாக சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அந்நாடு சில சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, பெயர் வைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்குத் தொடரப்படும்.

Chinese Court Directs Father to Change Daughter's Fashionable Name

அந்தவகையில், சீனாவில் வசித்து வரும் லியூ என்ற நபர் தனது மகளுக்கு பெய் யான் யுன் யி எனப் பெயரிட்டுள்ளார். ஆனால், இந்தப் பெயரில் லியூவின் குடும்பப் பெயர் வரவில்லை. இதனால், லியூ மீது அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘லியூ தனது மகளுக்கு பெயர் வைத்தது சட்டவிரோதமானது. எனவே, அந்தப் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

English summary
A Chinese court has declared "illegal" a "poetic" name given by a father to his daughter, as under the new rules parents have to name their wards after close relatives to discourage new trends of fashionable or unorthodox names.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X