சீனாவில் "ஷாக்.." அதிகரிக்கும் காய்ச்சல்.. மீண்டும் ஊரடங்கு போட திட்டம்? கொதித்த மக்கள்!
சீனாவின் சில இடங்களில் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவுக்கு போடப்பட்டது போல ஊரடங்கை விதிப்பது பற்றி சீன அதிகாரிகள் பரிசீலிப்பதாக சொல்லப்படுகிறது.
பீஜிங்: சீனாவின் சில மாகாணங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறதாம். இதனால், சாதாரண வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இந்த காய்ச்சல் அதிகமாக பரவினால் கொரோனாவுக்கு போடப்பட்டது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்று சீன அதிகாரிகள் ஆலோசிப்பதாகவும் இதனால் அங்குள்ள மக்கள் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த 2019 -ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
அதன்பிறகு தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் சீனாவைப் போல எந்த நாட்டிலும் அமல்படுத்தவில்லை.

சீனாவில் கொரோனா பரவல்
ஜீரோ கோவிட் பாலிசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய சீனா, பல லட்சம் பேர் வசிக்கும் பெரிய நகரங்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட ஒட்டு மொத்த நகரத்தையும் முடக்கியது. மக்கள் மிக மிக அத்தியாவசிய காரணங்கள் இன்றி வேறு எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கூட ஆயிரக்கணக்கில் தினசரி பதிவாகி வந்த நிலையில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான தங்கள் நாட்டில் இரட்டை இலக்க எண்களிலேயே கொரொனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சீனா கூறியது.

மிகக்கடுமையான கட்டுப்பாடுகள்
கடந்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. ஆனால், சீனாவில் அப்போதும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளே அமலில் இருந்தது. ஒரு கட்டத்தில் ஊரடங்குக்கு எதிராக மக்கள் கிளர்த்தெழுந்து பல இடங்களில் போராடத் தொடங்கினர். இதையெடுத்து வேறு வழியின்றி சீனா கடந்த ஆண்டு இறுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது.

காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு
சீன மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றி தற்போதுதான் மெல்ல நிம்மதி பெரு மூச்சு விடத்தொடங்கியிருக்கும் நிலையில் அங்கு மீண்டும் மக்களை கொதிப்படைய வைக்கும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளதாம். சீனாவில் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகமாக உள்ளது. எனவே இந்த காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்று சீன அதிகாரிகள் ஆலோசிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லாக்டவுன் போடப்படும்?
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷான்க்ஷி மாகாணத்தில் இருக்கும் ஷியன் நகரத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அந்த மாகாணத்தின் அதிகாரிகள் கூறுகையில், "சாதாரண வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகமாக உள்ளது. இது பெரும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக பரவத்தொடங்கும் போது தேவைப்பட்டால் லாக்டவுன் போடப்படும்" என்று கூறியுள்ளனர். சீன அதிகாரிகள் உடனடியாக லாக்டவுன் குறித்து எதையும் பரிந்துரைக்கவில்லை என்றபோதிலும் உள்ளூர் அதிகாரிகள் மிகைப்படுத்தி பேசுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கொந்தளித்த மக்கள்
மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கள் சீனாவில் அதிகரித்துள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் அந்நாட்டு மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்களாம். குறிப்பாக சாதாரண வைரசால் ஏற்படும் காய்ச்சல் இது. எனவே கொரோனா பரவலுக்கு போட்டது போன்ற கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அவசியமற்றது என்று வெய்போல் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்களாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications