பாகிஸ்தான் சென்ற சீனா அதிபர் ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சென்ற சீனா அதிபர் ஷி ஜின்பிங்க்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு சீனா அதிபர் பயணம் மேற்கொண்டிருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சீனா அதிபர் ஜின்பிங் தலைமையில் தொழிலதிபர்கள், சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இன்று இஸ்லாமாபாத் சென்றடைந்தது. இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன், பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ரகீல் ஷரீப் மற்றும் அமைச்சர்கள் சீனா அதிபரை வரவேற்றனர்.

பின்னர் ஜின்பிங்குக்கு முப்படையினர் அணிவகுப்புடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. பாகிஸ்தான், சீனா தேசிய கீதங்களை குழந்தைகள் பாடி ஜின்பிங் தலைமையிலான குழுவை வரவேற்றனர்.
இன்று பாகிஸ்தான் அதிபர், பிரதமரை சந்திக்கும் ஜின்பிங், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நாளை உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தின் போது பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான் இ பாகிஸ்தான் விருது ஜின்பிங்குக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. அத்துடன் சுமார் ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தமும் இந்த பயணத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications