Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய எல்லைக்கு மிக அருகில்.. சீன அதிபர் ஜின்பிங் திடீர் ஆய்வு.. என்ன காரணம்?.. பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு மிக அருகில் இருக்கும் திபெத்தின் லாசாவில் சீன அதிபர் , ஜி ஜின்பிங் திடீரென ஆய்வு செய்துள்ளார். ஜி ஜின்பிங் இந்த பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended Video

    Xi Jinping Visit To Tibet பர பர பின்னணி | India-China Border | Arunachal Pradesh|Oneindia Tamil

    இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானை போல் சீனாவும் இந்திய எல்லைக்குள் மூக்கை நுழைத்து அடிக்கடி குடைச்சல் கொடுத்து வருகிறது. லடாக்கில் இந்திய-சீனா எல்லையில் கடந்த ஆண்டு பெரும் பிரச்சினையை உண்டு பண்ணியது சீனா.

    கல்வான் பள்ளத்தாக்கில் மோதல்

    கல்வான் பள்ளத்தாக்கில் மோதல்

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன படை வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் ஏராளாமான ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இதன்பின்னர் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக் குவிக்கப்பட்ட ராணுவ பீரங்கிகள் உள்ளிட் ட வாகனங்கள், குறிப்பிட்ட படை வீரர்களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீற பார்ப்பதால் அங்கு பதற்றம் முழுமையாக இன்னும் தணியவில்லை.

     தொடர் சர்ச்சை

    தொடர் சர்ச்சை

    இது தவிர இந்தியாவில் இருக்கும் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்கள் எல்லை என்று சீனா பல
    ஆண்டுகளாக கூறி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை வளைக்கும் முயற்சியாக எல்லை பகுதிகளில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது சீனா.

    புல்லட் ரயில் வழித்தடம்

    புல்லட் ரயில் வழித்தடம்

    அருணாச்சல பிரதேசம் அருகில் இருக்கும் சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திபெத் பிராந்தியத்தில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு திபெத் தலைநகர் லாசா மற்றும் நியிங்சி இடையிலான 435.5 கி.மீ. துாரத்திற்கு புல்லட் ரயில் சேவையை சீனா தொடங்கியது. பிரதேசத்தின் எல்லையோரம் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அது பதற்றத்தை அதிகரித்து இருந்தது.

    ஜி ஜின்பிங் திடீர் ஆய்வு

    ஜி ஜின்பிங் திடீர் ஆய்வு

    இந்த நிலையில் அருணாச்சல பிரதேச எல்லைக்கு மிக அருகில் இருக்கும் திபெத்தின் லாசாவில் சீன அதிபர் , ஜி ஜின்பிங் திடீரென ஆய்வு செய்துள்ளது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு திபெத்தில் உள்ள நிங்சியில் புதன்கிழமை வந்தடைந்த ஜி ஜின்பிங், வியாழக்கிழமை லாசாவுக்கு சென்று ஆய்வு நடத்தி உள்ளார்.

    சீன ஊடகங்கள் செய்தி

    சீன ஊடகங்கள் செய்தி

    ஜி ஜின்பிங் இந்த பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அதிபர் ஜி ஜின்பிங் புதன்கிழமை நைங்கி மெயின்லிங் விமான நிலையத்திற்கு வந்ததாகவும், உள்ளூர் மக்களும் பல்வேறு இனக்குழு அதிகாரிகளும் அவரை அன்புடன் வரவேற்றதாகவும் கூறியுள்ளது.

    யூகங்களை கிளப்பியுள்ளது

    யூகங்களை கிளப்பியுள்ளது

    மேலும், "பின்னர் அவர் நியாங் நதி பாலத்தை பார்வையிட்டார் என்றும் யர்லுங் ஜாங்போ நதி மற்றும் அதன் துணை நியாங் நதியின் படுகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆய்வு செய்தார் என்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையை வளைத்து போட்டு தென் இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. தற்போது அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா அதிபர் திடீரென ஆய்வு மேற்கொண்டுளது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. இந்திய எல்லை பகுதிகளில் கடுமையாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+