ஜெர்மனி பயணத்தில் முதலீட்டை தட்டி தூக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்! 6500 பேருக்கு வேலை கன்பார்ம்!
டாசல்டார்ஃப்: தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து. ரூ.3,201 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் 6,500 பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 30ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர், ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரை சென்றடைந்தார். அங்கு ஜெர்மன் வாழ் தமிழர்கள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஜெர்மனி-தமிழ்நாடு இடையே புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

Knorr Bremse நிறுவனம்
Nordex குழும நிறுவனம்
Ebm-papst நிறுவனம்
என மொத்தம் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதில் Knorr Bremse நிறுவனத்துடன் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ரூ.2,000 கோடி முதலீட்டில் ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலையை விரிவுபடுத்த ரூ.1,000 கோடியில் ஒப்பந்தம் Nordex குழும நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதேபோல சென்னையில் உள்ள உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும் Ebm-papst நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications