வருங்கால ஆணுறைகள் எப்படி இருக்கும்?.. கேட்ஸ் வைத்த போட்டியில் குவிந்த 812 ஐடியாக்கள்!
கலிபோர்னியா பில் கேட்ஸின் பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் வைத்த ஒரு போட்டியில், எதிர்காலத்தில் ஆணுறைகளை எப்படித் தயாரிக்கலாம் என்பது குறித்து 812 வகையான ஐடியாக்களைக் குவித்து விட்டனராம் போட்டியில் கலந்து கொண்டவர்கள்.
ஆணுறைகள் இப்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் உலகம் பூராவும் பரவிக் கிடக்கிறது. ஆனால் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் தற்போதைய ஆணுறைகளால் முழுமையான பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று புலம்பியபடிதான் உறவுகளில் ஈடுபடுகிறார்கள்.
ஆணுறை பாதியிலே கிழிவது, பாதியிலேயே நழுவி விடுகிறது, உறுப்பு எழுச்சியைத் தடுப்பது என்று பல குறைபாடுகள் குவிந்தபடிதான் உள்ளது.
இந்த நிலையில்தான் பில் கேட்ஸின் அறக்கட்டளை எதிர்காலத்தில் எப்படிப்பட்ட ஆணுறைகளை தயாரிப்பது என்பது தொடர்பாக ஒரு போட்டியை வைத்தது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் விதம் விதமான யோசனைகளைக் கூறி அசரடித்து விட்டனராம்.

தேவையி்ல்லாத கர்ப்பங்கள், செக்ஸ் வியாதிகளைத் தடுக்க
தேவையி்ல்லாமல் கர்ப்பம் தரிப்பது, பாலியல் நோய்களைத் தடுப்பது, எய்ட்ஸ் போன்றவற்றை அறவே ஒழிப்பது ஆகிய நோக்கங்களுக்காகவே மேம்பட்ட ஆணுறைகளை எப்படித் தயாரிக்கலாம் என்பதற்காக இந்தப் போட்டியை அறிவித்திருந்தது கேட்ஸ் பவுண்டேஷன்.

812 யோசனைகள்
இந்தப் போட்டியில் பலர் கலந்து கொண்டு 812 வகையான யோசனைளைக் குவித்து விட்டனர்.

11 பேருக்கு பரிசு. பாராட்டு
இதில் 11 பேருடைய யோசனைகள் ஏற்கப்பட்டு அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா 1 லட்சம் டாலர் பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.

அமலானால் 10 லட்சம் டாலர் பரிசாம்
இவர்களது யோசனை அமலாக்கப்பட்டு வெற்றியும் பெற்றால் அவர்களுக்கு தலா 10 லட்சம் டாலர் பரிசாக கிடைக்குமாம்.

இந்திய நிறுவனமும் வெற்றியாளர்கள் பட்டியல்
இந்தியாவில் நீண்ட காலமாக ஆணுறைத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனமும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குவம் கிளீனர் தயாரிப்பு நிறுவனமும்
அதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த வாக்குவம் கிளீனர் தயாரிப்பு நிறுவனமும் வெற்றி பெற்றுள்ளது.

மெல்லிசாக, உறுதியாக
இந்த ஐடியாக்கள் பலவும் சுலபமான முறையில் எப்படி ஆணுறைகளைத் தயாரிப்பது என்பது குறித்து யோசனை தெரிவித்துள்ளன. மெல்லிசாக, அணிய எளிதாக, அதேசமயம் உறுதியாக, உணர்வுகளை மட்டுப்படுத்தாத வகையில் ஆணுறைகளைத் தயாரிப்பது குறித்து யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாறிழையிலிருந்து
அமெரிக்காவின் அபெக்ஸ் நிறுவனம் கூறியுள்ள ஐடியா என்னவென்றால், கொல்லேஜன் நாறிழையிலிருந்து ஆணுறையைத் தயாரிக்கலாம். இது பார்ப்பதற்கு மனிதனின் தோல் போலவே மெல்லிசாக இருக்கும். இது அணிவது சுலபம். மேலும், பசு மாட்டின் டென்டான்களிலிருந்தும், மீனின் தோலிலிருந்தும் கூட ஆணுறைகளைத் தயாரிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது.

செம ஸ்டிராங்
இந்த வகையான ஆணுறைகள் மிகவும் மெல்லிசாக இருப்பதோடு, நல்ல வலுவாகவும் இருக்கும். பாதியில் கிழியும், நழுவும் பிரச்சினைக்கே இதில் இடமில்லை என்பது இந்த நிறுவனத்தின் விளக்கமாகும்.

பாலித்தீன் பிளாஸ்டிக் ஆணுறை
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் யோசனை என்னவென்றால், பாலித்தீன் பிளாஸ்ட்டிக்கில் ஆணுறை தயாரிக்கலாம் என்பது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications