For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் வந்தால் கஷ்டம்.. வுஹன் திறந்து ஒரே வாரம்.. சீனாவில் கொரோனா 'செகண்ட் வேவ்'.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு பிறகு சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    அமெரிக்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் அந்த ஒற்றுமை

    சீனா கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டது.. இந்த வாக்கியம்தான் தற்போது உலகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆம், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சீனா தற்போது அதில் இருந்து மீண்டும் வந்த அதே சமயம் உலக நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது.

    பல நாடுகள் சீனாவை நம்பித்தான் தற்போது உள்ளது. சீனா கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் சீனா முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பும் முன் அங்கு மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

    கொரோனா லாக்டவுன்: நாகாலாந்தில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்- அஸ்ஸாமில் மதுகடைகள் திறப்பு கொரோனா லாக்டவுன்: நாகாலாந்தில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்- அஸ்ஸாமில் மதுகடைகள் திறப்பு

    சீனாவின் தற்போதைய நிலை

    சீனாவின் தற்போதைய நிலை

    சீனாவில் தற்போது கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் 82,160 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3329 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 77,663 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு 1156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு மொத்தமாக 3,341 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 2 பேர் பலியானார்கள். நேற்று புதிதாக 108 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

    மிக அதிகம்

    மிக அதிகம்

    சீனாவில் நேற்று 108 பேருக்கு கொரோனா ஏற்பட்டதுதான் கடந்த 39 நாட்களில் மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். ஆம் கடைசியாக மார்ச் 5ம் தேதி 143 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் இப்போதுதான் அங்கு மூன்று இலக்கங்களில் ஒரே நாளில் கொரோனா ஏற்படுகிறது. அதிலும் கடந்த ஒரு வாரம் முழுக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது.

     திடீர் அதிகரிப்பு

    திடீர் அதிகரிப்பு

    இந்த நிலையில் சீனாவில் திடீரென்று கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சீனாவில் தற்போது நோய் ஏற்படும் நபர்கள் எல்லாம் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டில் இருந்து சீனா வந்தவர்கள் மூலம் அங்கு கொரோனா பரவுகிறது. நேற்று கொரோனா ஏற்பட்டவர்களில் 99 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாட்டிற்கு உள்ளே வந்தவர்

    நாட்டிற்கு உள்ளே வந்தவர்

    அதேபோல் இந்த 99 பேரில் 49 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள். இவர்கள் சீனா ரஷ்யா அருகே இருக்கும் ஹெயிலோங்ஜியாங் பகுதி மூலமாக சீனாவிற்குள் நுழைந்து இருக்கிறார்கள். இவர்கள் மூலம் சீனாவிற்கு உள்ளே பொதுமக்கள் 7 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. இதனால் சீனாவில் தற்போது செகண்ட் வேவ் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கேள்வி சந்தேகம்

    கேள்வி சந்தேகம்

    பொதுவாக ஒரு இடத்தில் ஒரு நோய் தாக்கினால், அந்த நோய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தீவிரமாக இருக்கும். அதன்பின் திடீர் என்று வேகம் குறைந்து செயல் இழக்கும். இப்படி ஒரு செயல் இழந்த அல்லது குணப்படுத்தப்பட்ட ஒரு நோய் மீண்டும் தோன்றினால், மீண்டும் வேகம் எடுத்தால் அதுதான் செகண்ட் வேவ். அதாவது இரண்டாவது அலை. முதலில் தோன்றிய வைரஸ் மீண்டும் வந்தால் அதை செகண்ட் வேவ் என்று கூறுவார்கள்.

    மிக கஷ்டம்

    மிக கஷ்டம்

    இப்படி செகண்ட் வேவ் கொரோனா வைரஸ் தாக்கினால் அது மிகவும் கடினம் ஆகும். அதை கட்டுப்படுத்துவது கடினமான செயல் ஆகும். மீண்டும் கொரோனா ஏற்பட்டால் அது முன்பை விட வேகமாக வளரும். முன்பை விட தீவிரமாக கொரோனா ஏற்படும். அங்கு வுஹன் நகரம் திறந்து ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் இந்த இரண்டாம் அலை தாக்குதலை முடிந்த அளவு தடுக்க வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் என்று கூறுகிறார்கள்.

    சீனாவில் செகண்ட் வேவ்

    சீனாவில் செகண்ட் வேவ்

    தற்போது சீனாவில் இதேதான் நடக்கிறது. தற்போது சீனாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இது ஒருவேளை செகண்ட் வேவாக இருக்குமோ என்று மக்கள் அச்சம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அதே சமயம் சீனாவில் கொரோனா பாதிக்கும் நபர்களில் 60% பேருக்கு அதன் அறிகுறி இல்லை. அதாவது அறிகுறி இல்லாத கொரோனா ஆகும் இது.

    அறிகுறி இல்லாமல் தோன்றுகிறது

    அறிகுறி இல்லாமல் தோன்றுகிறது

    பொதுவாக கொரோனா வந்தால் உடனே இருமல், காய்ச்சல், மூச்சு விட சிரமம் உள்ளிட்ட அறிகுறி ஏற்படுவதுதான் வழக்கம். ஆனால் சீனாவில் சமீப நாட்களாக அறிகுறி எதுவும் இல்லாமலே கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதுதான் கொரோனாவின் Asymtomatic குணம் ஆகும். கொரோனாவின் இந்த அறிகுறியற்ற தன்மையால் அதை கண்டுபிடிப்பது கடினம். இது கொரோனா பரவலை மேலும் தீவிரப்படுத்தும். பலர் இதனால் வேகமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    Coronavirus: 108 cases in single days, China almost reaches the second wave of attack after 99 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X