For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேகத்திலும்.. பலி எண்ணிக்கையிலும் சார்ஸை மிஞ்சியது கொரோனா.. உலகின் கொடூர வைரசாக உருவெடுக்கிறது!

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது ஆகும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திடீர் வேகமெடுத்தது கொரோனா... பலி எண்ணிக்கையும் உயர்ந்தது | Coronavirus beats Sars in China

    பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது ஆகும். சார்ஸ் நோயின் பலி எண்ணிக்கையை விட கொரோனாவின் பலி எண்ணிக்கை அதிகம் ஆகும்.

    கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம், இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக 10400 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 20400 ஐதொட்டு இருக்கிறது. அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதேபோல் கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது.

    64 பேர் ஒரே இரவில் பலி.. 425ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 20,400 பேர் பாதிப்பு.. சீனாவை உலுக்கிய கொரோனா! 64 பேர் ஒரே இரவில் பலி.. 425ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 20,400 பேர் பாதிப்பு.. சீனாவை உலுக்கிய கொரோனா!

    சார்ஸ் போன்றது

    சார்ஸ் போன்றது

    சார்ஸ் மற்றும் கொரோனா இரண்டும் ஒரே வகை கொரோனா குடும்ப வைரஸ்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ வௌவால் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் வௌவால்கள்தான் கொரோனா குடும்ப வைரஸ்கள் சிலவற்றை இதற்கு முன் உருவாக்கியது. உதாரணமாக சார்ஸ் நோய் ஒரு வகை கொரோனா வைரஸ் மூலம் உருவானது. இது உருவாக காரணம் வௌவால்தான்.

    என்ன வேகம்

    என்ன வேகம்

    இந்த சார்ஸ் மூலம் மொத்தமாக 5327 பேர் பாதிக்கப்பட்டார்கள். இதன் மூலம் 349 பேர் பலியானார்கள். முதலில் சார்ஸ் அளவிற்கு கொரோனா வேகமாக இல்லை. ஆனால் இப்போது அதைவிட வேகமாக கொரோனா பரவ தொடங்கி உள்ளது. பிளேக் மற்றும் எச்1என்1 வைரஸ்கள்தான் உலகில் மிகவும் வேகமாக பரவிய வைரஸ்கள் ஆகும். தற்போது அந்த வைரஸ்களின் வேகத்திற்கு இணையாக இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கையின் அடிப்படையில் சார்ஸை கொரோனா முந்திவிட்டது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்ப்பட்டுள்ளது. சார்ஸ் வைரஸ் 12 நாடுகளை மட்டும் தான தாக்கியது. இதன் மூலம் சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடுமையான வைரஸ் கொரோனாதான் என்று உறுதி செய்யப்பட்டும் இருக்கிறது .

    எப்படி உறுதி

    எப்படி உறுதி

    சார்ஸ் நோய் 167 பேரில் இருந்து 5050 பேருக்கு பரவ மொத்தம் 37 நாட்கள் ஆனது. ஆம் முதலில் மெதுவாக பரவிய சார்ஸ் நோய் பின் வேகம் எடுத்தது. அதன்பின் தீவிரம் அடைந்தது. ஆனால் கொரோனா வைரஸ் சார்சை விட மோசமானது ஆகும். இது முதலில் 90 பேருக்கு பரவ தாமதம் ஆனது. ஆனால் 90 பேரில் இருந்து 5974 பேருக்கு வெறும் 11 நாட்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதன்பின் 20 ஆயிரம் பேருக்கு பரவ வெறும் 22 நாட்கள்தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதற்கு எவ்வளவு விரைவில் தீர்வு காணப்படுமோ, அவ்வளவு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

    English summary
    Coronavirus beats Sars in China, Become the deadlier than every other virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X