For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா.. அந்த 6 நாட்கள்.. மக்களிடம் உண்மைகளை மறைத்த சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா குறித்த முக்கியமான தகவல்களை சீன அரசு தொடக்க காலத்தில் மறைத்தது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இது தொடர்பான இன்னும் விவரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    மக்களிடம் உண்மைகளை மறைத்த சீன அரசு... வெளியான தகவல்

    சீனாவில் முதல் நபரை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க மாபெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது. சீனா இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டாலும், உலகின் பல நாடுகள் இந்த வைரஸால் மொத்தமாக நிலைகுலைந்து போய் இருக்கிறது.

    முக்கியமாக இந்த வைரஸ் அமெரிக்காவில்தான் 6.4 லட்சம் பேரை தாக்கி உள்ளது. உலகம் முழுக்க இப்படி பரவி வரும் கொரோனா வைரஸ் பரவ சீனாவும் ஒரு வகையில் மிக முக்கியம் காரணம் ஆகும்.

    நாளுக்கு நாள் அதிகரிப்பு- சிங்கப்பூரில் முதல் முறையாக ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நாளுக்கு நாள் அதிகரிப்பு- சிங்கப்பூரில் முதல் முறையாக ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    முதல் கேஸ்

    முதல் கேஸ்

    சீனாவில் முதல் கேஸ் வந்தது டிசம்பர் 1ம் தேதி. ஆனால் அப்போதே சீனா உலக நாடுகளையும், மக்களையும் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்க முடியாது. ஏனென்றால் சீனாவிற்கே அப்போது இந்த வைரஸ் குறித்து எதுவும் பெரிதாக தெரியாது. அதேபோல் அங்கு மருத்துவர்கள் இதை சாதாரண காய்ச்சல் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தனர். டிசம்பர் 15ம் தேதி வரை தினமும் அங்காங்கே இப்படி நிறைய கேஸ்கள் பதிவாகி வந்தது.

    வுஹன் நகர கேஸ்கள்

    வுஹன் நகர கேஸ்கள்

    சீனாவில் முதலில் பதிவான கேஸ்களில் முதல் 35 கேஸ்கள் வுஹன் நகரில்தான் பதிவானது. வுஹன் நகரில் உள்ள, மீன் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றவர்களுக்குத்தான் இந்த கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இதனால்தான் இந்த கொரோனா வைரஸ் அந்த மீன் மார்க்கெட்டில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இன்னும் இதன் தோற்றம் எப்படி, எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

    அரசுக்கு ரிப்போர்ட்

    அரசுக்கு ரிப்போர்ட்

    ஆனால் சீன அரசுக்கு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக தெரிந்து உள்ளது. இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுகிறது என்பது டிசம்பர் இறுதியிலேயே சீன அரசுக்கு தெரிந்து உள்ளது. ஆனாலும் சீன அரசு அதை குறித்து வெளியே தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. இந்த குழு தனது ஆராய்ச்சிகளை முடித்து ரிப்போர்ட் அனுப்பி உள்ளது. இதுதான் தற்போது கசிந்து உண்மை வெளியாகி உள்ளது.

    உண்மைகளை மறைத்தது

    உண்மைகளை மறைத்தது

    சீன அரசுக்கு இந்த ரிப்போர்ட் கிடைத்தது ஜனவரி 13ம் தேதி. ஆனால் சீன அதிபர் ஜி ஜிங்பிங் 6 நாட்கள் கழித்துதான் மக்கள் முன்னிலையில் பேசினார். ஆம், தன்னிடம் ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டு சரியாக 6 நாட்கள் கழித்துதான் அது பற்றி ஜி ஜிங்பிங் பேசி இருக்கிறார். அதுவரை அவர் நோய் குறித்து எதுவும் கவலைப்படவில்லை. மக்களிடம் எதுவும் பேசவில்லை. அதிகாரிகளுக்கு உத்தரவும் போடவில்லை. அந்த 6 நாட்களில் வைரஸ் பலருக்கு பரவி இருக்கிறது.

    எப்படிப்பட்ட ரிப்போர்ட்

    எப்படிப்பட்ட ரிப்போர்ட்

    இந்த ரிப்போர்ட்டில் இந்த வைரஸ் மனிதரிடம் இன்னோர் மனிதருக்கு பரவும். இது 14 நாட்கள் வரை அறிகுறி இல்லாமல் கூட இருக்கும். இதன் சோர்ஸ் தெரியவில்லை. ஆனால் வுஹன் நகரத்தில் வேகமாக பரவி வருகிறது என்று நிறைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சீனா அரசு இதை மறைத்து மிக லேட்டாக தகவல்களை வெளியிட்டுள்ளது. அதோடு உலக நாடுகளுக்கு இன்னும் தாமதமாகத்தான் இந்த செய்தியை வெளியிட்டது.

    ஹுவிற்கு தெரியாது

    ஹுவிற்கு தெரியாது

    உலக சுகாதார மையம் ஜனவரி 20ம் தேதி வரை இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தது. அதன்பின்தான் இது பரவும் தன்மை கொண்டது என்பதே உலக சுகாதார மையத்திற்கு தெரிந்தது. அதேபோல் இந்த வைரஸ் குறித்த தொடக்க மாதிரிகள், ஆராய்ச்சிகள் எல்லாம் தீயில் போட்டு சீன அரசால் கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து பேசிய மருத்துவர்கள் 8 பேர் மீது சீன அரசு வழக்கு போட்டது குறிப்பிடத்தக்கது.

    சீனா நினைத்து இருந்தால்

    சீனா நினைத்து இருந்தால்

    இந்த ரிப்போர்ட் தற்போது வெளியானதால் சீனா வசமாக மாட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் சீனா கண்டிப்பாக உலக நாடுகளின் நடவடிக்கையை சந்திக்கும் நிலை வரும். சீன அரசு நினைத்து இருந்தால் தொடக்கத்தில் முதல் வாரத்திலேயே இந்த வைரஸ் பரவுதலை தடுத்து இருக்க முடியும். வுஹனை விட்டு வெளியே செல்லாத வகையில் இந்த வைரஸை சீனா தடுத்து இருக்க முடியும். சீன அதிபருக்கு இருக்கும் அளப்பரிய பலத்திற்கு அவர் என்ன வேண்டுமானாலும் செய்து இருக்க முடியும்.

    வெளியே சொல்லவில்லை

    வெளியே சொல்லவில்லை

    அதோடு உலக நாடுகளை எச்சரித்து அந்த நாடுகள் பாதிக்காமல் பார்த்து இருக்க முடியும். ஆனால் சீனா அதை செய்யவில்லை. வேண்டுமென்றே தகவல்களை மறைத்து இருக்கிறது. கொரோனா குறித்த பல உண்மைகளை சீனா சொல்லாமல் தவிர்த்து வந்துள்ளது. கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றும் சீனாவில் தோன்றிய வைரஸ் என்றும் சொல்வது தவறு ஆகும். ஆனால் சீனா உண்மைகளை தொடக்க காலத்தில் மறைத்தது என்பது மட்டும் உண்மை!

    English summary
    Coronavirus: Chinese government didn’t warn the public about COVID-19 for the initial 6 key days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X