உலகமே பாராட்டிய தென் கொரியா நிலையை பாருங்க.. ஆரம்பித்த கொரோனா செகண்ட் வேவ்.. நைட் கிளப் காரணம்
கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட தென் கொரியாவில் தற்போது மீண்டும் செகண்ட் வேவ் கொரோனா தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
சியோல்: கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட தென் கொரியாவில் தற்போது மீண்டும் செகண்ட் வேவ் கொரோனா தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு நைட் கிளப் காரணமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
Recommended Video
உலகில் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றுதான் தென் கொரியா. தொடக்கத்தில் சீனாவிற்கு அடுத்து தென் கொரியாவில்தான் கொரோனா வேகமாக பரவியது. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள், மற்றும் சோதனைகள் மூலம் அங்கு கொரோனாவை தென் கொரியா கட்டுப்படுத்தியது.
தென் கொரியாவில் மொத்தம் 10909 பேருக்கு கொரோனா உள்ளது. 256 பேர் அங்கு பலியானார்கள். 9,632 பேர் குணப்படுத்தப்பட்ட நிலையில் 1021 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எப்படி குணம் ஆனார்கள்
மிக முக்கியமாக அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை பெரிய அளவில் மக்களுக்கு உதவியது. இதனால் மக்கள் அங்கு வேகமாக குணம் அடைந்தார்கள். அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கடைகள், அலுவலகங்கள், பீச்கள், மால், பப்கள் திறக்கப்பட்டது.

திடீர் சிக்கல்
இந்த நிலையில் திடீர் என்று தென் கொரியாவில் தற்போது மீண்டும் செகண்ட் வேவ் கொரோனா தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு நைட் கிளப் காரணமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தலைநகர் சியோல் அருகே இருக்கும் இடாவோன் பகுதி பப்கள் மற்றும் இரவு நேர பார்களுக்கு பெயர் பெற்ற இடமாகும். இங்கு இருக்கும் 3000க்கும் அதிகமான நைட்கிளப்கள் கடந்த வாரம் திறக்கப்பட்டது.

ஒரே நபர் மூலம் பரவியது
இந்த நிலையில் இங்கு இருக்கும் நைட் கிளப் ஒன்றுக்கு 29 வயது இளைஞர் சென்று உள்ளார். கொரோனா அறிகுறி இல்லாமலே இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் இவர் நைட் கிளப் சென்றுள்ளார். இவர் மூலம் தற்போது அங்கு வேகமாக மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இவர் மூலம் 29 பேருக்கு கொரோனா பரவி உள்ளது.

வேகமாக பலருக்கு பரவியது
இப்படி கொரோனா ஏற்பட்ட நபர்கள் வெவ்வேறு நைட் கிளப்களுக்கு சென்றுள்ளனர். இதனால் மொத்தம் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 43 கிளப்கள் இப்படி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 11 பேருக்கு கொரோனா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு மீண்டும் கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது.

செகண்ட் வேவ் கொரோனா
இதனால் தென்கொரியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் செகண்ட் வேவ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் செகண்ட் வேவ். செகண்ட் வேவ் ஏற்பட்டால் பொதுவாக முன்பை விட கொரோனா வைரஸ் அதிக வீரியமாக இருக்கும். இதனால் பலர் முன்பை விட அதிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது, என்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications