For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதை பற்றி சொல்ல மாட்டேன்.. "வுஹன் சோதனை கூடம்" பற்றி சீன அதிபரிடம் கேட்ட டிரம்ப்.. பரபரப்பு முடிவு!

கொரோனா வைரஸ் சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்று விசாரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் சீனாவில் சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்று விசாரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எங்கே தோன்றியது என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் வுஹன் மார்க்கெட்டில் இயற்கையாக உருவாகி இருக்கும் அல்லது சீனாவிற்கு வேறு நாட்டில் இருந்து வந்து இருக்கும் சீன அரசு தெரிவித்து வருகிறது.

ஆனால் கொரோனா வைரஸ் சீனாவில் சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்து கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறை விரைவில் விசாரணை நடத்தும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

சிங்கப்பூரில் செம கல்லா கட்டும் இந்திய ஹோட்டல்கள்.. கொரோனா காலத்துக்கு ஏற்ப மாறியதால் சாத்தியம் சிங்கப்பூரில் செம கல்லா கட்டும் இந்திய ஹோட்டல்கள்.. கொரோனா காலத்துக்கு ஏற்ப மாறியதால் சாத்தியம்

டிரம்ப் அளித்த பேட்டி

டிரம்ப் அளித்த பேட்டி

இந்தநிலையில் அதிபர் டிரம்ப் தற்போது இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், உலகம் முழுக்க கொரோனா வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து அமெரிக்கா விரைவில் மீண்டு வரும். கொரோனா வைரஸ் வுஹன் சோதனை கூடத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்று செய்திகள் வருகிறது. அந்த செய்திகளை நான் படித்து வருகிறேன். அந்த தகவல்கள் எனக்கு தெரியும்.

விசாரணை செய்கிறோம்

விசாரணை செய்கிறோம்

நாங்கள் இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். முழுமையாக என்ன நடந்தது என்று விசாரணை செய்வோம். இந்த சூழ்நிலை எப்படி ஏற்பட்டது என்று விசாரணை செய்துதான் முடிவு எடுப்போம் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் ஏதாவது பேசினீர்களா என்று டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதை பற்றி கூற முடியாது

அதை பற்றி கூற முடியாது

இதற்கு பதில் அளித்த டிரம்ப் , ஜி ஜிங்பிங்கிடம் நான் என்ன பேசினேன் என்பதை கூற முடியாது. முக்கியமாக சோதனை கூடம் குறித்து என்ன பேசினேன் என்று சொல்ல முடியாது. நான் அதை பற்றி இப்போது விவாதிக்க விரும்பவில்லை. இப்போது அதை பற்றி பேசுவது சரியாக இருக்காது, இன்னொரு நாள் அதை பற்றி பேசலாம் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.

முக்கியமான ஒரு விஷயம்

முக்கியமான ஒரு விஷயம்

இதனால் சீன அதிபர் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியமான விஷயம் எதையோ பேசி இருக்கிறார். முக்கியமாக வைரஸ் ஆராய்ச்சி குறித்து முக்கியமான விஷயம் எதையோ பேசி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்ற உண்மைகள் அப்போது வெளியாக வாய்ப்புள்ளது.

சீனாவிற்கு விளக்கம்

சீனாவிற்கு விளக்கம்

இந்த நிலையில் டிரம்ப் பேச்சு குறித்து சீனாவிற்கு விளக்கம் அளித்த அமெரிக்க துணை அதிபர் மைக் பாம்பியோ, கொரோனா குறித்த உண்மைகளை சீனா வெளியிட வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த உண்மைகளை சீனா வெளியிட வேண்டும். சீனா இதில் அனைத்து விஷயங்களையும் மொத்தமாக வெளியிட்டு வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும் என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

English summary
Coronavirus: US President Trump decides to investigate the origin of the COVID-19 in China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X