For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா எப்படி பரவியது? எத்தனை நாடுகள் பாதித்துள்ளது.. பின்னணி என்ன? ஹு வெளியிட்ட அறிக்கை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க மொத்தம் 95,265 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 3281 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருப்பதற்காக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona virus : Affected toll nears 1 lakhs all over the world

    இந்த நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார மையம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதானாம் கேப்ரியேசஸ் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 143 பேருக்கு மட்டுமே வைரஸ் ஏற்பட்டுள்ளது. 95,265 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 3281 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர்.

    சீனாவிற்கு வெளியே நேற்று மட்டும் 33 நாடுகளில் 2055 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதிலும் இதில் 80% பாதிப்பு மூன்று நாடுகளில் ஏற்பட்டுள்ளது. கொரியாவில் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சரியாகி வருகிறது.

    அங்கு புதிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்போது புதிதாக தாக்குதலுக்கு உள்ளாகலாம் நபர்கள் கூட ஏற்கனவே நோய் ஏற்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்கள்தான்.

    Coronavirus: WHO releases a report on the epidemic around the world

    அதே சமயம் சில நாடுகளில் பெரிய அதிக அளவில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 115 நாடாவுகளில் இதுவரை நோய் தாக்குதலை இல்லை. 21 நாடுகளில் ஒரே ஒரு நபருக்கு மட்டும் நோய் தாக்குதல் உள்ளது. ஏற்கனேவே நோய் தாக்குதலுக்கு உள்ளான 5 நாடுகளில் கடந்த 14 நாட்களாக இந்த நோய் தாக்குதல் ஏற்படவில்லை.

    இந்த வைரஸ் எப்படி எல்லாம் பரவும் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. அதன்படி இந்த வைரஸ் முதற்கட்டமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நீர் குமிழிகள் மூலம் பரவும். அதாவது இருமல், தும்மலின் போது வெளியாகும் நீர் குமிழிகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும். அதேபோல் கை குலுக்குதல் மூலம் கூட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனாவை எதிர்கொள்வதை விட, அது தொடர்பான வதந்திகளை எதிர்கொள்வதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    கொரோனாவை தடுக்கவும், எதிர்கொள்ளவும் உலக நாடுகள் பின்வரும் பணிகளை செய்ய வேண்டும்:

    • அவசர செயல்பாடுகளை, திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும். மொத்த அரசும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
    • மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும்.
    • சோதனை நடைமுறைகளை எளிதாக்கி பரவலாக்க வேண்டும்.
    • மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.போதுமான மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்
    • வதந்திகளை தடுக்க வேண்டும்
    • மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி அளிக்க வேண்டும்
    • பாதுகாப்பு கருவிகள், சாதனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும்
    • இது மோசமான நோய், அதனால் கண்டிப்பாக, கவனமாக செயல்பட வேண்டும்

    English summary
    Coronavirus: WHO releases a report on the status of the epidemic around the world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X