For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா.. ஆண்களின் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்படுமா? அதிர வைக்கும் வுஹன் மருத்துவ ஆராய்ச்சி!

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படலாம் என்று சீனாவை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படலாம் என்று சீனாவை சேர்ந்து மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். டோங்ஜி மருத்துவமனையில் இது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.

Recommended Video

    கொரோனாவால் ஆண்களின் இனப்பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

    சீனாவின் வுஹன் நகரில் இருக்கும் டோங்ஜி மருத்துவமனை சீனாவின் மிகவும் பிரபலமான மருத்துவமனைகளில் ஒன்றாகும். சீனாவில் கொரோனாவிற்கு எதிராக சிகிச்சை மேற்கொள்ளும் நான்கு முக்கிய மருத்துவமனைகளில் டோங்ஜி மருத்துவமனை ஒன்றாகும்.

    அந்நாட்டு அரசு சார்பாக டோங்ஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் டோங்ஜி மருத்துவமனையின் இனப்பெருக்க உயிரியல் பிரிவு மருத்துவர்கள் கொரோனா குறித்து முக்கிய ஆராய்ச்சிகளை செய்து உள்ளனர்.

    டோங்ஜி மருத்துவமனை

    டோங்ஜி மருத்துவமனை

    டோங்ஜி மருத்துவமனையின் இனப்பெருக்க உயிரியல் பிரிவு மருத்துவர் லி யுபெங் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின்படி கொரோனா வைரஸ் இதயத்தைதான் பாதிக்கிறது. இதயத்தில் angiotensin-converting enzyme 2 எனப்படும் புரோட்டின் அதிகம் உள்ள பகுதியை இந்த கொரோனா வைரஸ் தாக்குகிறது. angiotensin-converting enzyme 2 ஐ சுற்றி இருக்கும் திசுக்களை அழித்து, கொரோனா மனிதர்களை கொல்கிறது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    பொதுவாக உடலில் angiotensin-converting enzyme 2 அதிகம் காணப்படும் பகுதியில்தான் இந்த கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த என்சைம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பாதிக்கிறது. இந்த நிலையில் இந்த angiotensin-converting enzyme 2 மனிதர்களின் இதயம் அருகே மட்டும் இல்லை. அது மனிதர்களின் விந்தணுக்கள் உற்பத்தி நடக்கும் விதை பைக்கு அருகிலும் அதிகம் காணப்படுகிறது.

    இதயம் எப்படி

    இதயம் எப்படி

    இதயத்திற்கு அடுத்தபடியாக angiotensin-converting enzyme 2 என்சைம் விதை பைக்கு அருகில்தான் காணப்படுகிறது . இதனால் இந்த கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு உற்பத்தியை பாதிக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த என்சைம்தான் ஆண்களின் இனப்பெருக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று விளக்கி உள்ளனர். அதனால் கொரோனா இந்த என்ஸைமைகளை பாதித்து, ஆண்களின் இனப்பெருக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

    முடிவு

    முடிவு

    ஆனால் இப்போதைக்கு இது தொடர்பாக முடிவுகளை அறிவிக்க முடியாது. இப்போதுதான் ஆராய்ச்சி செய்து வருகிறோம். கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஆண்களை இது தொடர்பாக எச்சரித்துள்ளோம். அவர்களை விந்தணு தொடர்பாக சோதனை செய்ய கூறியுள்ளோம். சிலரை நாங்களே சோதனை செய்து வருகிறோம். அதன்பின்தான் முடிவு தெரியும் என்றுள்ளனர்.

    சார்ஸ் எப்படி

    சார்ஸ் எப்படி

    ஏற்கனவே சார்ஸ் நோய் வந்த போதும் இதே சந்தேகம் எழுந்தது. சார்ஸ் காரணமாக ஆண்களின் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுந்தது. அப்போது இது நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த covid 19 மூலம் ஆண்களின் விந்து அணுக்களிலோ, இனப்பெருக்கத்திலோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று இப்போது கூறுகிறார்கள். ஆனால் இதை இன்னும் எந்த மருத்துவரும் உறுதி செய்யவில்லை.

    English summary
    Coronavirus: Will the COVID-19 affect Men testicles? - Wuhan Research.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X