கதறும் முகமது யூனுஸ்.. வங்கதேசத்தில் கவிழும் இடைக்கால அரசு? ஆப்பு வைக்கும் ராணுவ தளபதி! பரபரப்பு
டாக்கா: வங்கதேச ராணுவ தளபதி முகமது உஸ் ஜமான் தலைமையில் அவசர மீட்டிங் நடத்தி உள்ளார். அவருக்கும், அந்தநாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ராணுவ தளபதி முகமது யூனுஸ் தலைமையிலான அவசர மீட்டிங் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்டை நாடாக வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். இவர் நம் நாட்டுடன் நெருக்கமாக இருந்தார். நம் நாடும் வங்கதேசத்துக்கு தேவையான நிதி, பொருள் உதவிகளை வழங்கி வந்தது. ஆனால் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தில் போராட்டம் வெடித்தது.
வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

அடங்காத வங்கதேச கொந்தளிப்பு
இந்த மாணவர்கள் போராட்டம் - வன்முறையால் வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. தலைநகர் டாக்கா உள்பட நாடு முழுவதும் போலீசாருடன் ராணுவத்தினர் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.
இவர் நாட்டில் அமைதியை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது யூனுஸ் வங்கதேசத்தில் அமைதியை உருவாக்கவில்லை. அங்கு தொடர்ந்து கொந்தளிப்பான நிலை தான் நிலவி வருகிறது. மாறாக வங்கதேசத்தின் சட்டம் ஒழுங்கு மீது கண்வைக்காமல் நம் நாட்டுடன் மோதி வருகிறார். பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் சேர்ந்து முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இதனால் வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ராணுவ தளபதி - முகமது யூனுஸ் மோதல்
அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனாவால் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட முகமது உஸ் ஜமானை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் நபரை அந்த பொறுப்பில் நியமிக்க சதி வேலையையும் செய்தார். பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து இந்த வேலையை கையில் எடுத்தார்.
ஆனால் நம் நாட்டின் உளவுத்துறை புகுந்து அந்த சதியை முறியடித்தது. இதனால் தற்போது முகமது யூனுஸ் மற்றும் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் இடையே மோதல் என்பது வலுத்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் இருந்து இடைக்கால அரசு தவறிவிட்டது என்று வாக்கர் உஸ் ஜமான், முகமது யூனுஸை விமர்சனம் செய்து வருகிறார்.
ராணுவ தளபதி அவசர மீட்டிங்
இந்நிலையில் தான் வங்கதேச ராணுவ தளபதி முகமது உஸ் ஜமான் ராணுவ அதிகாரிகளுடன் அவசர மீட்டிங்கை நடத்தி உள்ளார். இந்த மீட்டிங் என்பது நேற்று வங்கதேசத்தின் ராணுவ தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த மீட்டிங்கில் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
குறிப்பாக அந்த நாட்டின் 5 லெப்டினன்ட் ஜெனரல், 8 மேஜர் ஜெனரல்கள், தனி அதிகாரம் படைத்த கமாண்டிங் ஆபிசர்ஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது மக்கள் மத்தியில் இடைக்கால அரசின் மீதான நம்பிக்கை குறைந்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் நல்ல சூழலை ஏற்படுத்துவது பற்றியும், இதற்கு ராணுவம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சியை கவிழ்ப்பது பற்றி விவாதம்
இதற்கிடையே தான் நாட்டில் தற்போதைய சூழல் தொடரும் பட்சத்தில் வங்கதேச மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கலாம் என்றும், இதனால் விரைவில் நாட்டின் விரைவில் எமர்ஜென்சி நிலையை கொண்டு வர வேண்டும் அல்லது முகமது யூனுஸின் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் சார்பில் அந்த நாட்டின் அதிபருக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் முகமது யூனுஸின் இடைக்கால அரசு கவிழும்.
அதன்பிறகு ராணுவத்தின் வழிக்காட்டலில் அனைத்து கட்சிகளை ஒன்றிணைத்து புதிய அரசை அமைப்பது தொடர்பாக ராணுவம் பரிசீலனை செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் நம் நாட்டை தீவிரமாக எதிர்த்து வரும் முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசின் ஆட்சி விரைவில் கவிழும் நிலை உருவாகி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ராணுவ தளபதி - முகமது யூனுஸ் மோதல் ஏன்?
வங்கதேச ராணுவ தளபதி முகமது உஸ் ஜமான், தொடக்கம் முதலே நாட்டில் அமைதியை விரும்பி வருகிறது. அதோடு இந்தியா உடனான உறவை விரும்புகிறார். பல பத்திரிகை பேட்டிகளில் அதனை அவர் வெளிப்படுத்தி உள்ளார். இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது புதியது அல்ல. நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது.
வங்கதேசம் புதிதாக உருவான சமயத்தில் இருந்தே இருநாடுகள் இடையே பந்தம் உள்ளது. அதோடு இந்தியாவை சார்ந்து வங்கதேசமும், வங்கதேசத்தை சார்ந்து இந்தியாவும் உள்ளது என்று கூறினார். இது முகமது யூனுஸ்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனென்றால் அவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளதோடு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
ராணுவத்துக்கு எதிராக போராட்டம்
அதேபோல் வங்கதேசத்தை மினி பாகிஸ்தானாக மாற்ற முயற்சிக்கும் முகமது யூனுஸ்க்கு, ராணுவ தளபதி முகமது உஸ் ஜமான் பெரும் தலைவலியாக இருந்து வருகிறார். இதனால் முகமது யூனுஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் வங்கதேச ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளை வைத்து ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதோடு வங்கதேச ராணுவத்துக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள் என்பது ராணுவ தளபதி முகமது உஸ் ஜமானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஒரு கட்டமாக தான் அவர் ராணுவ உயரதிகாரிகளுடன் அவசர மீட்டிங்கை நடத்தி உள்ளார். மேலும் வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ராணுவம் செயல்பட தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மீட்டிங்கை தொடர்ந்து தான் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கவிழ்த்து வங்கதேசத்தை ராணுவ ஆட்சி நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications